Connect with us

News

“2 மினிட்ஸ் மேகி மாதிரி பத்து நிமிடத்தில் தவளை அடை..!” – இப்படி செய்து அசத்துங்க..!!

By TamizhakamMarch 22, 2023 6:30 AM IST

திடீரென்று வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் மாவு இருந்தால் பிரச்சனையில்லாமல் ஒரு டிபனை எளிமையாக செய்து அசத்தி விடுவோம். அதே சமயம் மாவு இல்லாத போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். அந்த சமயத்தில் இந்த தவளை அடையை நீங்கள் செய்து அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கலாம்.

அது மட்டுமில்லாமல் இந்த அடை சாப்பிடுவதற்கு மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது இந்த தவளை அடைய செய்வதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தவளை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்

1.கோதுமை ரவை 1/4 கிலோ

2.பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

3.பச்சை மிளகாய் இரண்டு

4.பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி

5.இஞ்சி துருவல்

6.கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன்

7.மஞ்சத்தூள் கால் சிட்டிகை

8.உப்பு தேவையான அளவு 9.எலுமிச்சம் பழம் ஒரு ஸ்பூன்

10.தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் நீங்கள் கோதுமை ரவையை எடுத்திருக்கும் அளவைவிட இரண்டு பங்கு அளவு நீரை விட்டு முதலில் ஒரு பௌலில் போட்டு அப்படியே ஊற விடுங்கள். பிறகு இது நன்கு ஊறிய பிறகு அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு கிளற வேண்டும்.

 பிறகு இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி சுவைக்கு ஏற்ப உப்பு இவற்றையும் போட்டு நன்கு கிளறுங்கள். இப்போது அந்த கலவையானது சற்று கெட்டியாக இருக்கும் பச்சத்தில் கடலை மாவு, மஞ்சத்தூள், எலுமிச்சை சாறு இவற்றை கலந்து கொண்டு போதுமான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கி விடுங்கள்.

 இதனை அடுத்து துருவிய தேங்காய் துருவலை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மாவானது அடைமாவின் பதத்திற்கு ஏற்ப திக்காக இருக்கிறதா என்று பாருங்கள்.

 அதிக தண்ணீரைக் கொண்டு கரைத்து விடாதீர்கள். அடை மாவு பக்குவத்தில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அடுப்பில் தோசை கல்லை போட்டு இந்த மாவினை அடை மாவு போல வார்த்து எடுக்க வேண்டும்.

 அதை ஒரு பக்கம் நன்கு சிவந்து வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி நன்கு அழுத்தி வேக விடவும். இரண்டு பக்கமும் பொன் நிறமாக சிவக்கும் படி வேக வைக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நல்லெண்ணையோ தேங்காய் எண்ணெயோ நெய்யோ ஊற்றி அடையை சுட்டு எடுக்கலாம்.

இந்த தவளை அடையை  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உணவை பெரியவர்கள் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top