Connect with us

News

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்…

By TamizhakamMärz 2, 2024 5:58 AM IST

மகாராஷ்டிரா சேர்ந்தவரான காஜல் அகர்வால் ஒரு சில இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது என்னவோ தென்னிந்திய மொழி திரைப்படங்கள் தான். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான கியூனில் ஒரு சிறிய பாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஹோ கயா நா படத்தின் மூலம் பரீட்சியமனார். பின்னர் மற்ற மொழிகளில் வாய்ப்புகள் தேடிய அவருக்கு தெலுங்கில் லட்சுமி கல்யாணத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

அதன் பிறகு அதே ஆண்டில், அவர் சந்தமாமா படத்திற்காக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று டோலிவுட்டில் மார்க்கெட் பிடித்துவிட்டார். ஆனால், அந்த பெரிதாக வசூல் ஈட்டவில்லை. 2009 ஆம் ஆண்டின் வரலாற்று கற்பனைத் திரைப்படமாக வெளிவந்த மகதீரா திரைப்படம் மாபெரும் ஹிட் அடுத்து வசூலில் கல்லா கட்டியது.

இதையும் படிங்க : சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..

அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் ஒட்டுமொத்த திரைத்துறை கவனமும் காஜல் அகர்வால் மீது பாய்ந்தது. அந்த திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அத்துடன் விமர்சனப் பாராட்டையும் பெற்று மளமளவென வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் 2008ம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

அந்த படத்திற்கு பிறகு நான் மகான் அல்ல, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மாரி, விவேகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தது மார்க்கெட் பிடித்தார். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கோலிவுட்டையே ஒரு ரவுண்டு அடித்துவிட்டார் காஜல் அகர்வால்.

அத்துடன் 4 முறை பிலிம்பேர்க்கு நோமினேட் ஆன காஜல் சைமா, யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியா, கோட்ஜியஸ் பெல்லி ஆப் இயர், பாஷன் ஐகான் பெமினா அவார்ட் உள்ளிட்ட விருதுகளை அள்ளிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் `இந்தியன் – 2′ திரைப்படத்தில் காஜல் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வாலின் அக்கா நிஷா அகர்வாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு திருமணம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். காஜல் அகர்வாலும் கடந்த 2020ல் கெளதம் கிச்சுலு என்ற இன்டீரியர் டிசைனரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவ்வப்போது மகனின் சில கியூட்டான வீடியோ, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க : அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு… படப்பிடிப்பு தளத்தில் காஜல் அகர்வாலின் அந்த உறுப்பை கடித்த இளம் நடிகர்…

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடித்துக்கொண்டே புதிய தொழிலை துவங்கியிருக்கும் காஜல்…»காஜல் பை காஜல்» என்ற பெயரில் அழகு சாதனப் பொருள் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் கணிசமான வருமானத்தையும் அவர் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கவலை வேண்டாம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஜீவா நடிகை காஜல் அகர்வாலின் கையை பிடித்து கடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு என்று கலாய் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top