Connect with us

News

தலை நிக்காத போதையில் குஷ்பூவை தூக்கி சென்ற இளம் நடிகர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

By TamizhakamMarch 4, 2024 5:27 AM IST

1990க்களில் கொழுக் மொழுக் அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

குறிப்பாக 1990களில் தமிழ்த் திரைப்பட உலகில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாகத் வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ் மட்டும் அல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

Kushboo

இதனிடையே நடிகர் பிரபுவை உயிருக்கு உயிராக காதலித்து அவரை பிரிந்துவிட்டார்.அதன் பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து மணந்தார் குஷ்பு. தமிழில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இதனிடையே தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகை குஷ்பு. ஆம், 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். குஷ்பு ஏற்கனவே 8 வயதில் தனது தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார். அது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்: வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.. கிருட்டு கிருட்டுன்னு வருதே…

இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பூ பிரபல தனியார் விடுதி ஒன்றில் குடிபோதையில் தள்ளாடி வந்தார். தலைநிக்காத போதையில் இருந்தவரை இளம் நடிகர் அப்பாஸ் தான் கார் வரை அழைத்துச் சென்று காரில் ஏற்றி விட்டார்.

ஆனால், இன்று நடிகை குஷ்பூ தேசிய மகளிர் பாதுகாப்பு குழுவின் உயர் பொறுப்பில் இருக்கிறார் இவர் தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனை நான் கண்ணால் பார்த்தேன் இது தவறு என்றால் குஷ்பூவின் மீது வழக்கு தொடங்கட்டும் என்று தடாளியாக கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பாண்டியன். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top