Connect with us

News

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெற்றியடைவதற்கு சிம்பு செய்த செயல் என்ன தெரியுமா?

By TamizhakamSeptember 13, 2022 9:47 AM IST

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இரட்டை நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் போட்டி நிலவி வருகிறது. எம்ஜிஆருக்கு சரியான இணையான போட்டியை தந்தவர் சிவாஜி அவரைப்போலவே  ரஜினி மற்றும் கமலகாசன் இடையே அந்தப் போட்டி நிலவி வந்தது. இவர்களை அடுத்து தல அஜித் மற்றும் விஜய் இடையே அதுபோல் போட்டி இருந்தது. தற்போது தனுஷ் மற்றும் சிம்பு  இடையே அந்த இரட்டை நடிகர்களின் தாக்கமும், போட்டியும் நிறைந்துள்ளது.

 இந்தச் சூழ்நிலையில் தனுசுக்கு அவரின் மனைவியை விவாகரத்து செய்த பின்பு எந்த படமும் சிறப்பாக ஓடவில்லை என்றே கூற வேண்டும். ஆனால் சத்தமில்லாமல் சாதனை புரிந்திருக்கிறார்  திருச்சிற்றம்பலம் படத்தில். இந்தப்படம் அதிக எதிர்பார்ப்புக்கு இடையே மிகச் சிறப்பான முறையில் ஓடி மிகச்சிறந்த வசூலை இவருக்கு பண்ணி தந்துள்ளது.

 இதற்கு ஒரு முக்கிய காரணமாக சிம்பு விளங்குவதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறிவருகிறது. அப்படி என்ன சிம்பு செய்தார்? என்று நீங்கள் யோசிப்பது எனக்குத் தெரிகிறது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அது தொடர்பாக விமர்சனங்கள் எழும்.இந்த விமர்சனங்கள் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று படத்தை நன்றாக கூறுவார்கள் இல்லை என்றால் அதற்கான நெகட்டிவ் விமர்சனத்தை வைப்பார்கள். இந்த படம் வெளிவருவதற்கு முன்பு வந்த விமர்சனங்கள் அனைத்தையுமே நெகட்டிவாக வரவிடாமல் சிம்பு தடுத்தார் என்று கூறுகிறார்கள். அதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடையே படம் வெளிவரும்வரை எந்தவிதமான கருத்துக்களையும்,நெகட்டிவ் விமர்சனத்தை நீங்கள் தெரிவிக்க கூடாது என சூசகமாக பேசியிருந்தார்.

 இதனையடுத்து  எந்தவித நெகட்டிவ் கமெண்டுகளை பெறாமல் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிக நல்ல பெயரை மீண்டும் தனுசுக்கு  தந்ததோடு ஒரு மிகச் சிறந்த கம்பேக் படமாக இருந்தது.

 இந்நிலையில் விரைவில் சிம்புவின்  வெந்து தணிந்தது காடு படம் வெளிவர கூடிய நிலையில் இவர் இவ்வாறு செய்திருப்பது தன்னுடைய படத்திற்கும் இதுபோன்ற உதவியை தனுஷ் செய்யலாம். அவர்கள் ரசிகர்கள் கட்டாயம் செய்வார்கள் என்று ஒரு சூசக தன்மையோடு தான் செய்திருப்பார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

 சிம்பு நடித்து அன்மையில் வெளிவந்த மாநாடு படத்தில் அவர் எதிர்பாராத வெற்றியை கொடுத்ததோடு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அதுபோல இந்த வெந்து தணிந்த காடுகள் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top