Connect with us

News

200 கோடி கொடுக்க முன் வந்த சேனல்.. கடுப்பேற்றிய அந்த டிமாண்ட்.. பிக்பாஸை தூக்கி போட்ட கமல்..!

By TamizhakamAugust 9, 2024 6:02 AM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.

இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார்.

அதிரடியாக விலகிய கமல்:

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,»கனத்த இதயத்துடன் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்.

சினிமாவில் எனக்கு இருக்கும் கமிட்மென்ட் காரணமாக வரப்போகும் பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக உங்கள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வந்து சேர்ந்தது மகிழ்ச்சி.

நீங்கள் என்மீது பொழிந்த அன்பிற்கும், பாசத்திற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

பிக் பாஸ் பங்கேற்பாளர்களுக்கு நீங்கள் கொடுத்த தீவிர ஆதரவுதான் இந்த நிகழ்ச்சியை இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறது.

ஒரு நெறியாளராக உங்களுடன் சேர்ந்து பயணித்து என்னுடைய எண்ணங்களையும், அறிவையும் உங்களோடு பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.

கனத்த இதயத்தோடு விலகிவிட்டார் கமல்:

இதன் மூலம் என்னாலும் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது, அதற்கு நன்றி. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், விஜய் டிவி குழுவினருக்கும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக மாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரவிருக்கும் சீசன் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள்» என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை எடுத்து அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள்? என்ற பேச்சு தொடர்ச்சியாக அடிபட்டு வந்தது.

இதில், நயன்தாரா , நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி , உள்ளிட்ட பிரபலங்களின் பேச்சுக்கள் தொடர்ச்சியாக அடிபட்டு வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் புதிய படம்:

இப்படியான நேரத்தில் கமல்ஹாசன் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்? என்ன காரணம் என்பது குறித்து இதுவரை வெளி வராத தகவல் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளர் ஆன செய்யார் பாலு கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பிரம்மாண்ட படைப்பாளியான ராஜமவுலி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் .

ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து ஒரு சயின்ஸ் பிக்சன் அல்லது வரலாற்று கதை படமாக இருக்கிறார்கள் .

இந்த கதையின் ஒன்லைனை கமல்ஹாசனிடம் கூற கமலும் தனக்கு ஏற்ற மாதிரி கதையில் சில மாற்றங்களை கூறியிருக்கிறார் .

இப்படியாக இந்த திரைப்படம் செதுக்கி செதுக்கி தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது .

விஜய் டிவி கேட்ட சம்பளத்தை கொடுக்கலயா:

எனவே தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது கிட்டத்தட்ட 4…. முதல் 5 ஆண்டுகள் ராஜமவுலி இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதால்தான் அவர் இதிலிருந்து விலகினார் என கூறப்படுகிறது .

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசன் கேட்ட சம்பளத்தை விஜய் தொலைக்காட்சி கொடுக்க முடியாததால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறுகிறார்கள்.

அது அப்பட்டமான பொய்….. கமல்ஹாசன் எவ்வளவு கேட்டாலும் விஜய் டிவி கொடுக்க தயாராக இருக்கிறது. ரூ. 200 கோடி கேட்டாலும் அவருக்கு அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .

ஏனென்றால் அந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமே கமல்ஹாசன் தான். அவர் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி ஒன்றுமே இல்லை…. எனவே ரூ. 200 கோடி எல்லாம் அவர்களுக்கு ஒரு காசே கிடையாது.

எனவே கமல் ராஜமௌலி இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளபிரம்மாண்ட படத்தில் நடிக்க செல்கிறார். அதன் தான் இப்படி ஒரு முடிவு என அவர் அந்த பேட்டியில் கூறினார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top