பிரபல திரைப்பட பாடகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனியின் மகள் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இந்த விவகாரம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இதற்காக தான் தற்கொலை செய்து கொண்டார் என பாடகி சுசித்ரா அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமாக சிறந்து விளங்கி வந்தவர்தான் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி:
இவர் முதன்முதலில் இசையமைப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்தார். பெரிதாக திரை பின்னணி சேர்ந்த குடும்பம் ஏதும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு இடத்தை பிடித்தார்.
விஜய் ஆண்டனி 7 வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். அதன் பிறகு சவுண்ட் இன்ஜினியராக தனது பணியை செய்து வந்தார்.
பின்னர் விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் திரைப்படம் “சுக்கிரன்” திரைப்படம். சுக்ரன் திரைப்படத்தில் தனது கெரியரை ஆரம்பித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
நினைத்தாலே இனிக்கும் , காதலில் விழுந்தேன் ,மரியாதை, அங்காடித்தெரு, அவள் பெயர் தமிழரசி, நான் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.
பெரும்பாலும் விஜய்ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களை ஒரு விதமான புத்துணர்ச்சியோடு ஆட்டம் போட வைக்கும் பாடலாகவே இருக்கும்.
தனது இசையின் மூலம் தனித்துவமான திறமையை நிரூபித்து காட்டிய விஜய் ஆண்டனிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
பாடகராக விஜய் ஆண்டனி:
அத்துடன் அவர் பாடகராவும் பல்வேறு படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார். விஜய் ஆண்டனி அடையாள பாடலாக பார்க்கப்படுவது காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “அட்ரா அட்ரா நாக்க முக்க” பாடல் தான்.
இந்த பாடல் இன்றுவரை ரசிகர்களின் ஃ பேவரைட் பாடலாக கொண்டாட வைக்கும் பாடலாகவும் இருந்து வருகிறது.
தொடர்ந்து நட்சத்திர இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனிக்கு நடிக்கும் ஆசை பற்றிக்கொள்ள நான் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகினார்.
தொடர்ந்து சலீம்,பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இதில் பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தெலுங்கு சினிமா ரசிகர்களும் கொண்டாடிய தீர்த்தனர்.
இதனிடையே விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. முன்னதாக இவரது தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் எனக் கூறப்பட்டு வந்தது.
மகள் மீராவின் மரணத்தில் புதைக்கப்பட்ட உண்மை:
இந்த நிலையில் தற்போது அவரது மரணம் குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, விஜய் ஆண்டனியின் மகள் மீராவுக்கு பாடி ஷேமிங் நடந்ததாகவும் அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாராம்.
குறிப்பாக பள்ளி தோழிகள் பலர் அவரை பாடி ஷேமிங் செய்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி தனது பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர்களும் நீ சின்ன குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறார்கள்.
இதனால் மீரா ஒரு விதமான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனிக்கு அண்மையில் விபத்து நேரிட அதில் அவரது முகம் முழுவதும் செய்தமடைந்து விட்டது.
உடனடியாக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அமைப்பை மாற்றி அழகான தோற்றத்திற்கு மாறினார்.
இதை பார்த்த மீரா நீங்கள் மட்டும் உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு அழகாகி விட்டீர்களே நான் எத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் என சண்டையிட்டு இருக்கிறார்.
மகள் தொடர்ந்து அடம் பிடிக்கவே ஒரு சில நாடுகளின் பெயரை சொல்லி கண்டிப்பாக அங்கு போய் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம் என மீராவை சமாதான செய்து வந்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
பகீர் கிளப்பிய சுசித்ரா:
ஆனால் ஒரு கட்டத்தில் கோபத்திற்கு உள்ளான விஜய் ஆண்டனி குடும்பத்தோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தட்டை தூக்கி எறிந்து பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து வைக்க முடியாது நீ சின்ன பொண்ணு புரிந்துக்கொள்ள என கோபமாக கூறிவிட்டு சென்றாராம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா அன்று இரவே தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பாடகி சுசித்ரா கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
சமீப நாட்களாக சுசித்ரா பல விஷயங்களை நம்ப தக்க வகையில் கூறிவரும் நிலையில் இதுவும் உண்மையாகத்தான் இருக்கும் என நெட்டிசன்ஸ் பலரும் அவரின் இந்த கருத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
இருந்தாலும் இது குறித்த உண்மையை விஜய் ஆண்டனி மௌனம் கலைத்தால் மட்டுமே தெரிய வரும் என்பது பரவலான கருத்தாக பார்க்கப்படுகிறது.