Connect with us

News

‹தவளை தன் வாயால் கெடும்› என்பதைப் போல இருக்கிறது TTF வாசனின் நிலைமை..!! புகார் அளித்த ஐயப்பன் ராமசாமி..!! வச்சு செய்த நெட்டிசன்கள்..!!

By TamizhakamMärz 22, 2023 4:05 PM IST

TTF வாசன் இவர் ஒரு மோட்டோ பைக் VLOGGER. இவர் ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலமாக நிறைய ஊர்களுக்கு சென்று வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருபவர்.

இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இணிலையில் TTF வாசன் தற்சமயம் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பிரபல யூட்யூப் நிறுவனமான NewsGlitz-இல் பணி புரியும் செய்தி தொடர்பாளர் ஐயப்பன் ராமசாமியை கடுமையாக விலாசியுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோ அனைத்து சமூக ஊடகங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் அவர் ஐயப்பன் ராமசாமியை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். காரணம் ஐயப்பன் ராமசாமி, மாதேஷ்,முக்தார் போன்றவர்கள் அடங்கிய ஒரு வீடியோவை மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில் அனைவரும் மது அருந்தி கொண்டு பெண்களைப் பற்றி இழிவாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இதனை மதன் ரவிச்சந்திரன் அவர்கள் தனது பர்சனல் மொபைலில் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து அதை இணையதளத்தில் விட்டுள்ளார்.இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பரவியது.

இதனைத் தொடர்ந்து ஐயப்பன் ராமசாமி இதற்கு முன்பு TTF வாசனை ஒரு நேர்காணலில் பகிரங்கமாக நிறைய குற்றச்சாட்டுகளை அவர் மேல் வைத்தார். அதற்கு TTF வாசனால் எதுவும் பேச முடியாமல் பாதியிலேயே பேட்டியை நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார்.

இதன்மூலம் நிறைய இளைஞர்கள் டிடிஎஃப் வாசனை ட்ரோல் செய்து வந்தனர். இதற்கு இடையில் தற்சமயம் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் ஐயப்பனும் இருந்ததால் டிடிஎஃப் வாசன் பழிக்கு பழி தீர்க்கும் எண்ணத்தில் ஐயப்பன் ராமசாமியை கடுமையாக விளாசி கொலை மிரட்டலும் விட்டுள்ளார்.

இதனை அறிந்த ஐயப்பன் ராமசாமி காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனால் காவல்துறை வாசனிடம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் டிடிஎஃப் வாசன் மற்றும் ஐயப்பன் ராமசாமி இடையே நடக்கும் இந்த கேளிக்கையான நிகழ்வினை அனைவரும் பார்த்து சிரித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top