இன்று இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியம் எந்த அளவுக்கு உள்ளது என்று நாம் கூற முடியாது பொதுவாக இன்று இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வலிமையாக எளிமையான ஊட்டத்தான இந்த உளுந்தங் கஞ்சியை நாம் கொடுப்பதின் மூலம் மிக நல்ல பலன்களை பெற முடியும்.
கருப்பு உளுந்தை வைத்து பாரம்பரிய முறைப்படி செய்கின்ற இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிடுவதின் மூலம் இளம் வயது பெண்களுக்கு கர்ப்பப்பை வலிமையாவதோடு எலும்புகளும் வலிமை அடையும் குறிப்பாக இடுப்பு எலும்பு நன்கு வலிமை பெறும்.
இந்த உளுந்தங்கஞ்சியை தற்போது நாம் பிரஷர் குக்கரை பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
உளுந்தங்கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்
1.உடைத்த கருப்பு உளுந்து ஒரு கப்
2.மட்டை அரிசி 3 டேபிள் ஸ்பூன்
3.6 கப் தண்ணீர்
4.தேவையான அளவு உப்பு
5.வெல்லம் அரை கப்
6.ஏலக்காய்
7.சுக்கு
8.தேங்காய் பால் அரை கப்
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை அடுத்து அந்த வாணலியிலேயே மட்டை அரிசியை போட்டு அதேபோல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு கலவையும் நன்கு குளிர்ந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை கொர கொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த இரண்டும் சேர்ந்த பொடியை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஆறு பங்கு நீரினை விட்டு நன்கு கட்டி இல்லாமல் கரைத்து குக்கரில் ஊற்றி விடவும்.
இப்போது அடுப்பை பற்று வைத்து குக்கரை வைத்து மூன்று விசில் வரும் வரை காத்திருங்கள். மூன்று விசில் வந்த பிறகு குக்கரை ஓபன் செய்து சிறிதளவு உப்பை சேர்த்துக் கொண்டு நன்கு கிளறி விட்டு அடுப்பை ஸ்விம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது இனிப்பு கஞ்சி என்பதால் வெல்லத்தை நன்கு பொடித்து தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் லேசாக சூடு செய்து அந்த கரைசலை வடிகட்டி பிறகு கஞ்சியில் ஊற்றி கிளறவும்.
இப்போது இதனோடு வாசத்திற்காக ஏலக்காய் பொடி, சுக்கு பொடி போன்றவற்றை போட்டு நன்கு கிளறி விடவும்.இதனை அடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை இதனோடு கலந்து விட்டு அடுப்பை ஆப் செய்து விடவும். இப்போது ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி தயார்.