Connect with us

News

«வலிமை» படம் எப்படி இருக்கு..? – இயக்குனர் ஹெச்.வினோத் விமர்சனம்..!

By TamizhakamFebruar 23, 2022 10:21 AM IST

Valimai Review : அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், வினோத் இயக்கத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ள படம் ‹வலிமை›. இப்படம் தமிழகத்தில் தனிப்பெரும் திரைப்படமாக வெளியாக உள்ளது. போட்டிக்கு இங்கு வேறு படங்கள் எதுவும் இல்லை. படத்தைத் தமிழைத் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக அஜித் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததில்லை. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாலும், ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருப்பதாலும் தெலுங்கு, ஹிந்தி மார்க்கெட்டில் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகா, கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் எந்த போட்டியும் இல்லாமல் படம் வெளியாகிறது.ஆனால், தெலுங்கு, ஹிந்தியில் ‹வலிமை› படத்திற்குப் போட்டியாக இரு படங்கள் உள்ளன.

வலிமை FDFS ..

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள ‹பீம்லா நாயக்›, ஹிந்தியில் ஆலியா பட் நடித்துள்ள ‹கங்குபாய் கத்தியவாடி› ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோவை தான் பார்க்கப்போவதில்லை என இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார்.

படம் குறித்து பேசிய அவர், படத்தை ஏறகனவே பல முறை பார்த்துவிட்டதால், முதல் நாள் முதல் ஷோவை பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.

படம் எப்படி..

வலிமை படத்தின் கதை பல பதிப்புகளாக ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், அஜித் நடிக்கிப்போகிறார் என தெரிந்தவுடன் சில அப்கிரேடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பமாக பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமை படம் உருவாகியிருப்பதாகவும் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் பெரும் குடும்ப பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் என இரண்டும் இருப்பதால் குடும்ப பார்வையாளர்களையும் கடந்து அஜித் ரசிகர்களுக்கும் விருந்தாக வலிமை இருக்கும் என ஹெச் வினோத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top