Connect with us

News

“ப்பா.. கொல்றியே டி..” – வாணி போஜன் வெளியிட்ட வீடியோ..! – புலம்பும் ரசிகர்கள்..!

By TamizhakamOctober 5, 2022 6:41 PM IST

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாரணம் ஆயிரம் சூர்யா நடிகை சமீரா ரெட்டியை பார்த்ததுபோல கொல்ட்ரியே டி என்று புலம்பி மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பயணித்து வந்த நடிகை வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி சினிமா நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.

மாடல் அழகியான இவர் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு, மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர் விளம்பரப் படங்களில் நடிக்க முயற்சி செய்துவந்தார்.

அதன் மூலம் இவருக்கு விளம்பரப் பட வாய்ப்பும் கிடைத்தது ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தெய்வமகள் சீரியல் இயக்குனர் வாணி போஜனிடம் வந்து நான் ஒரு சீரியல் இயக்குகிறேன் அதில் நீங்கள் நடிக்கிறீர்களா..? என்று கேட்க நடிகை வாணி போஜன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அந்த நிமிடம் தான் நடிகை வாணி போஜன் வாழ்க்கையில் திருப்புமுனை என்று கூற வேண்டும். காரணம், இந்த தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டி.. சரியாக சொல்லவேண்டும் என்றால் 1466 எபிசோடுகள் ஓடியது.

இந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றன. அதிலும் குறிப்பாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வாணி போஜன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட கூடிய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் வாரணம் ஆயிரம் சூர்யா கணக்காக அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top