Connect with us

News

இதனால் தான் நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருக்கார்.. வாணி போஜன் பரபரப்பு பேச்சு..!

By TamizhakamJuli 31, 2024 7:28 PM IST

ஒரு சீரியலின் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியல் மூலமாக அதிக வரவேற்பை பெற்றவர் வாணி போஜன்.

தெய்வமகள் சீரியல் சன் டிவியில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அதில் கதாநாயகியாக நடித்த வாணி போஜனுக்கும் சினிமாவில் வாய்ப்பை பெற்று கொடுத்தது. எடுத்த உடனே சினிமாவிற்கு அவர் சென்று விடவில்லை என்றாலும் டிவி சீரிஸ்களில் நடித்து அப்படியே சினிமாவிற்கு வந்துவிட்டார்.

 ஜெய் நடிப்பில் ட்ரிபில்ஸ் என்கிற பெயரில் ஒரு வெப் சீரிஸ் வெளியானது. அதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்தார். ஹாட்ஸ்டார் தயாரித்த இந்த வெப் சீரிஸில் வாணி போஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து நடித்து வந்த வாணி போஜனுக்கு பிறகு ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஓ மை கடவுளே திரைப்படத்தை பொருத்தவரை அந்த படத்தில் கதாநாயகிக்கு அடுத்து ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வாணிபோஜனின் கதாபாத்திரம் இருந்தது.

இதன் மூலம் சினிமாவில் வரவேற்பை பெற்றார் வாணி போஜன். தொடர்ந்து இப்பொழுதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதற்கு நடுவே அவ்வப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவிட முடியும்.

சமீபத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் சட்னி சாம்பார் என்கிற வெப் சீரிஸில் கூட வாணி போஜன் நடித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தால் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார் வாணி போஜன்.

நயன்தாரா குறித்து கருத்து:

இதனாலேயே அறிமுக இயக்குனர்கள் சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வாணி போஜனை நாடி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வாணி போஜன் சமூக வலைதளங்கள் நடிகைகளை பற்றி தவறாக எழுதுவது குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ”ஆரம்பத்தில் இவர்கள் எழுதும்போது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் போக போக பழகிவிட்டது என்ன வேண்டுமானாலும் எழுதிக்கோங்கடா என்று விட்டு விடுவேன். ஆனால் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஆரம்பத்தில் வாணி போஜன் என்று பெயர் வந்தாலே நம்மளை பற்றி என்ன எழுதி இருக்காங்க என்று எடுத்து ஆவலாக பார்ப்பேன். ஆனால் என்னை பற்றி தவறாகவே எழுதி இருப்பார்கள். ஆனால் இப்பொழுது மீடியா கொஞ்சம் மாறி இருக்கிறது.

என்னை பற்றியும் கொஞ்சம் நன்றாக எழுதுகிறார்கள் மிகப்பெரும் உயரத்தை தொடுவதற்கு இவற்றையெல்லாம் தாண்டி வர வேண்டி இருக்கு நயன்தாரா மாதிரியான நடிகைகள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்த்து இருப்பார்கள் என்று யோசிக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் அப்படியான ஒரு இடத்தை தொட முடிந்தது என்று கூறியிருக்கிறார் வாணி போஜன்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top