Connect with us

News

ஹீரோயினாகும் வனிதா..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

By TamizhakamMai 24, 2024 7:59 AM IST

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்படும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ச்சியாக கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது.

குறிப்பாக சொந்தமாக பிசினஸ் செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதனிடையே YouTube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார்.

நடிகை வனிதா:

இந்த நிலையில் தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போதைய இணையத்தில் தீயாக வைரல் ஆகி வருகிறது.

அதிலும் ஆச்சரிய குறி ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்று கேட்கிறீர்களானால் அப்பிடத்தில் வனிதா உடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார் என்பது குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வனிதா விஜயகுமார் தற்போது பிக் பாஸ்› ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான ராபர்ட் மாஸ்டர் உடன் தான் புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறாராம்.

இப்படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கணவருக்கு ஜோடியாகும் வனிதா:

இந்நிலையில் வனிதா விஜயகுமார் மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து இருக்கும் விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு «மிஸ்டர் அண்ட் மிஸஸ்» என தலைப்பிடப்பட்டுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் பாங்காங்கில் தொடங்கியிருக்கிறது . அங்குள்ள மாரியம்மன் கோவில் சில தினங்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது.

அத்தோடு இந்த திரைப்படத்தில் வனிதாவின் அப்பாவாக நடிகர் ரவி காந்த நடிக்க அம்மாவாக சகிலா நடிக்கிறார்கள்.

அவர்களோடு பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் போன்றவர்களும் நடிக்கிறார்கள். வனிதா தன்னுடைய மகளை கதாநாயகியாக ஆசைப்படுகிறேன் என்ற சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது அவரே மீண்டும் கதாநாயகி ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜோதிகா ஏதேனும் ஒரு சிறிய ரோலில் நிச்சயம் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் ஜோவிகா இப்படத்தில் தயாரிப்பு பணியில் இருக்க இருப்பதாக செய்திகள் கூறுகிறது. கணவன் மனைவியாக ராபர்ட் மாஸ்டர் வனிதா இருவரும் வாழ்ந்து வந்தனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் படமொன்றில் ஜோடியாக இணைந்திருக்கும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

முன்னதாக ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பை வாங்கி கொடுத்ததே வனிதா தான் என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் .

ஆனால் அவர் பிக் பாஸ்க்கு போன பிறகு ரக்ஷிதாவுடன் தகாத முறையில் பழகி நெருக்கமாக பழகி காதலிக்கிறேன் என்றெல்லாம் கூறி வந்ததால் வனிதா மிக உரிமையோடு சண்டையிட்டார் .

வனிதாவுக்கு மீண்டும் திருமணமா?

அது குறித்து பல பேட்டிகளில் நான் எந்த விஷயத்திற்காக அவரை உள்ளே அனுப்பினேனோ அதை தவிர மற்ற எல்லாத்தையும் செய்து கொண்டு இருக்கிறார் என வனிதா திட்டி தீர்த்தார்.

இப்படியாக வனிதா ராபர்ட் மாஸ்டர் மீது மிகவும் உரிமை எடுத்து அக்கறையோடு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் இவர்கள் இருவரும் திரைப்படம் ஒன்றில் இணைந்திருப்பதால் இவர்களது வாழ்க்கையில் கூட ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என யூகிக்க முடிகிறது.

ஒருவேளை மீண்டும் இவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறது திரைத்துறை வட்டாரம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top