Connect with us

News

ஆசை யாரை விட்டது…1000 கோடி பட்ஜெட்… வரலாற்று படம் வேள்பாரியை எடுக்க தயாராகும் இயக்குனர் சங்கர்!

By TamizhakamSeptember 11, 2022 1:51 PM IST

தற்போது போது தன் கையில் உள்ள மூன்று படங்கள் முடித்த பின்னால் பொன்னியின் செல்வன் போலவே இருக்கக் கூடிய மற்றொரு வரலாற்று படமான வேள்பாரியை எடுக்க தயாராகிக் கொண்டு இருக்கிறாராம் இயக்குனர் சங்கர் அதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ஜென்டில்மேன் மூலம் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரை வாங்கி அதை ஜீன்ஸ் படத்தில் தக்க வைத்து மீண்டும் இவரை போல் எவரும் படத்தை அதிக பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்று 90 களிலேயே பெற்ற இயக்குனர் தான் சங்கர்.

தெலுங்கில் பல சரித்திர படங்கள் வந்திருந்தாலும் தமிழில் தற்போது உருவாகி இருக்க கூடிய பொன்னியின் செல்வனை பார்த்தபிறகு இவருக்கும் ஒரு வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை எழுந்துள்ளது. அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக அவர் வேள்பாரி என்ற வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த வேள்பாரி படமும் கல்கியின்  நாவலைப் போலவே மதுரையைச் சார்ந்த எம்.பி. சு வெங்கடேசன்  எழுதிய வேல் பாரி நாவலை தழுவி இருக்கும். இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை இயக்குனர் சங்கர் மேற்கொண்டு வருகிறார்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை அமைக்கும் பணியை சு.வெங்கடேசன் உடன் இணைந்து சங்கர் மேற்கொண்டிருக்கிறார் தெரிகிறது.

 நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன்2 படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.  இதுபோல ஹிந்தியில் அந்நியனின் ரீமேக் படம் போய்க்கொண்டிருக்கிறது.இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசை யாரை விட்டது. இனி அடுத்த ஆண்டு இவர் தயாரிக்கக்கூடிய மிகப்பிரம்மாண்டமான என்ற வரலாற்றுக் காவியம்  வரும் முன்பே இது எப்படி இருக்கும்  என்று ரசிகர்கள் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top