Connect with us

News

கொடுக்கணும்னு நினைக்கிற நல்ல மனசுக்காரன்… வெங்கட் பிரபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

By TamizhakamSeptember 20, 2022 10:48 AM IST

கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்கி இதில் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். இந்த வெற்றியானது அவருக்கு மேலும் பல படங்களை செய்யக்கூடிய வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தது. அந்த வரிசையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 மாநாடு திரைப்படத்தில்  துணை இயக்குநர்களுக்கு இவர் தாராளமாக சம்பளம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இணை இயக்குனர்களுக்கு நல்ல முறையில் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான் இவர். தயாரிப்பாளர்கள் குறைவாக பணத்தைக் கொடுக்க முற்பட்டாலும் அவர் அதை விடுத்து மிகவும் நல்ல முறையில் உதவி இயக்குனர்களை கவனித்துக்கொள்வார்.

 அந்த வகையில் தன்னோடு இணைந்து துணை இயக்குனராக பணிபுரிந்த மாநாடு இயக்குனர்களுக்கு சுமார் 40,000 ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இதே போல் தற்போது  செய்து வரும் படத்திற்கு உதவி இயக்குனர்களாக இருப்பவர்களுக்கு மிக அதிக அளவு சம்பளமாக 65 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

 மிகவும் கலகலப்பாக அனைவரிடமும் மிக எளிதாக பழகும் பழக்கம் கொண்ட வெங்கட்பிரபுவின் இந்த எண்ணத்தில் மண்ணை போடுவதுபோல தெலுங்கில் உதவி இயக்குனர்களாக பணிபுரிவதற்கு அந்த சம்பளத்தை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதற்கு காரணம் தெலுங்கு திரைப்பட உலகில் சமீபத்தில் ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணத்தினால் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதோடு பல சட்டதிட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களின் அடிப்படையில் தான் படப்பிடிப்பு சம்பளம் இவை எல்லாமே இருக்குமாம். இதனை காரணம் காட்டி இவரால் தற்போது 65 ஆயிரம் ரூபாயை தனது உதவி இயக்குனர்களுக்கு கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மேலும் தயாரிப்பாளர்களின் தரப்பிலிருந்து அந்தத் தொகை இனி கிடைக்காது என்பது இதில் முக்கியமான விஷயமாகும். நல்ல மனது படைத்த வெங்கட் பிரபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

பணம் படைத்தவர்களுக்கு கொடுப்பதற்கு மனமில்லை என்றாலும் மனம் படைத்தவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லாத கொடுமையை என்னவென்று சொல்வது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top