முதல்வன் Style-லில் ராஜதந்திர கேள்விகள்… மொத்த Suspense ‘ம் போச்சு – பதறிப்போன வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி ,மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோபியுடன் ஆன நேர்காணலில் கலந்து கொண்டார் வெங்கட் பிரபு.

விஜய்யின் கோட் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அஜித் மற்றும் விஜய் இவர்கள் இரண்டு பேருடனும் மிகச்சிறந்த நட்பு முறையில் பழகி வரும் ஒரே இயக்குனர் வெங்கட் பிரபு தான்.

அப்படிப்பட்ட இயக்குனர் விஜய் பற்றியும் அஜித்துடன் பணியாற்றியதை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சொல்லப்போனால் நான் கோட்படத்தின் பாடல்கள்… சில பல காட்சிகளையும் அஜித்திடம் சென்று காண்பித்து இருக்கிறேன்.

அவர் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என சில சஜ்ஜஷன்களையும் கூறுவார். அவங்க ரெண்டு பேருக்கும் எந்த ஒரு விரோதமோ எந்த ஒரு போட்டி பொறாமைகளோ எதுவுமே இல்லை .

அஜித் – விஜய் உண்மையிலே இப்படிதான்:

அவர்களுடன் வேலை பார்த்தது வரை நான் பார்த்து தெரிந்து கொண்டது இதுதான். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள் .

ஆனால் ரசிகர்கள் தான் அதை தேவையில்லாமல் சண்டையாக விரோதிகளாக திரித்து விடுகிறார்கள் என வெங்கட் பிரபு அந்த பேட்டில் கூறியிருந்தார்.

கோட் படத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித்தை ஒரு விஷயத்திற்காக நான் போய் சந்திக்கிறேன்.

அப்போது உடனடியாக அவர் விஜய் பற்றியும் அவருடைய படத்தை பற்றி தான் என்னிடம் கேட்டார். எனவே ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியா கேஷுவலா தான் பழகிட்டு வராங்க.

அவங்களுடைய எண்ணமும் மிகவும் தூய்மையாக தான் இருக்கு என வெங்கட் பிரபு அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

எனவே அஜித் விஜய் அவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்.

அப்படித்தான் மங்காத்தா படத்தின் சூட்டிங் நடந்த அதே இடத்தில் தான் விஜய்யின் வேலாயுதம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

மங்காத்தா 2 கோட் படமா?

அப்போது நான் அஜித்திடம் உங்க ரெண்டு பேரும் சேர்த்து வைத்து ஒரு போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும் அஜித் என்னை அழைத்துக்கொண்டு விஜய்யின் கேரவனுக்கு கூட்டிட்டு போயி அங்க நிக்க வச்சு என் கூட ரெண்டு பேருமே சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டாங்க.

அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். அப்போது கிட்டத்தட்ட ஒரு 20 நிமிடம் எங்களோட உரையாடல் சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தான் அவர்களிடம் சொன்னேன். உங்க ரெண்டு பேரையும் வச்சு ஒரு மாஸ் ஹிட் படம் கொடுக்கணும் அப்படின்னு நான் நினைக்கிறேன் என கொன்ன உடனே அவங்க ரெண்டு பேருமே நெகட்டிவ் ரோலுக்கு தான் போட்டி போட்டார்கள் .

அது என்னால் மறக்கவே முடியாது. எனவே நெகட்டிவ் ரோலில் நடிக்க அவங்க ரெண்டு பேருமே ரொம்ப விருப்பப்பட்டாங்க.

அதேபோல் கோட் திரைப்படத்தில் மங்காத்தாவின் டயலாக் “இனிமே சத்தியமா குடிக்க கூடாது” என்று அந்த டயலாக் வச்ச உடனே…விஜய் இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்காடா? என்று கேட்டார்.

அதேபோல் மங்காத்தா படத்தில் பார்த்த பல சாயல் இந்த படத்தில் தெரிகிறது. அதுல சிஎஸ்கே இடம் பெற்றது.

இதுலயும் ஸ்டேடியம் காட்டுவீங்க… அதுலயும் இனிமே குடிக்கவே கூடாதுடா என்ற டயலாக் இருக்கு…

இதுலயும் அப்படி ஒரு டயலாக் வருது…. ஆக கிட்டத்தட்ட மங்காத்தா சாயலில் இந்த படம் இருக்கிறது என கேட்டதற்கு வெங்கட் பிரபு இல்லவே இல்லை என மறுப்பு தெரிவித்தார்.

வெங்கட் பிரபு என்றாலே கிரிக்கெட் தான் இந்த படத்தில் தோனி ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது அது உண்மையா? என கேட்டதற்கு…

கேமியோ ரோலில் தோனி?

வெங்கட் பிரபு மழுப்பலாக இல்லை அதெல்லாம் இல்லை என கூறினார். ஆனால், தோனி வச்சு ஒரு காட்சி எடுக்கலாம் அப்படின்னு பிளான் பண்ணோம்… நாங்க பிளான் பண்ண உடனே அந்த விஷயம் செய்தியா நடந்துச்சு.

அதுவே எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்துச்சு. பிளான் தான் பண்ணோம் அதுக்குள்ள எப்படி நியூஸ் வந்துடுச்சு? என்று ஒரு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த அளவுக்கு ரசிகர்கள் ரொம்ப துரிதமா வேலை செய்றாங்க. கோட் படத்தில் காந்தி என்ற கேரக்டர் மக்களுக்காக என்ன சாக்ரிஃபைஸ் பண்றாரு என்பது தான் கதை.

மோகன் தவிர வேறொரு வில்லன் இந்த படத்தில் இருக்கிற மாதிரி தெரியுது? என கோபி கேட்ட உடனே வெங்கட் பிரபு ஆமா இருக்காரு என கூறினார்.

ஒருவேளை அது வெங்கட் பிரபுவா? என கேட்டதற்கு அவர் சிரித்து இல்ல இல்ல… இருக்காரு ஒருத்தர் இருக்காரு அது சஸ்பென்ஸ் எனக்கு கூறினார்.

உடனே கோபி அந்த வில்லன் ட்ரெய்லரில் இருக்காரா? என கேட்டதற்கு இல்ல… அயோ!! இன்னும் ரெண்டு நாள் தானே விடுங்களேன் என கதறினார்.

இரட்டை வேடம் இல்ல… மூன்று கேரக்டரில் விஜய்:

அதற்கு கோபி…..இதைவிட பெரிய சந்தேகம் ஒன்று இருக்கு…. படத்துல ரெண்டு விஜய் ரெண்டு விஜய் அப்படின்னு சொல்றீங்க….!

ஆனால், யோகி பாபு வச்சு ஒரு கனெக்டிங் பாயிண்ட் இருக்கு. அப்போ இன்னொரு விஜய் இருக்காரா? என்ன சந்தேகத்துடன் கேள்வி கேட்டார் கோபி.

உடனே வியர்த்து விறுவிறுத்து போன வெங்கட் பிரபு… ஆமாம் சர்ப்ரைஸ் இருக்கு எனக்கு கூறினார்.

ஆக மூன்று விஜய் வச்சு படம் எடுத்துட்டு என்கிட்ட ரெண்டு விஜய் ரெண்டு விஜய்ன்னு ஏமாத்திட்டு இருக்கீங்களா? என கேள்வி எழுப்பியதற்கு…. வெங்கட் பிரபு… எங்க சர்ப்ரைஸா எதுவுமே விட மாட்டீங்களா ? எல்லாத்தையும் கேட்டு வாங்கிடுறீங்க என கதறினார்.

மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இருக்கிறதா சொல்றாங்க இருக்கிறாரா? என கேட்டதற்கு இருக்கலாம்…. இல்லாமலும் போகலாம் என மழுப்பலான பதிலை கூறினார் பிரபு.

ஆக இந்த படத்தில் நடிகர் மோகனை தவிர இன்னொரு பயங்கரமான வில்லன் இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

அது சூர்யாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் மூன்று கேரக்டரில் விஜய் நடித்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …