Connect with us

News

விஜய் நடுதெருவுக்கு வருவார்.. விஜய் வீட்டில் நடந்த கூத்து.. சாபமிட்ட மனைவி.. என்ன ஆச்சு..?

By TamizhakamJuli 20, 2024 11:33 AM IST

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து திரை உலகை விட்டு விலகி முழு நேர அரசியலில் களம் இறங்கப் போகும் இவர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பெயரில் தனது கட்சி பணிகளை செய்து வருகிறார்.

விஜய் நடுத்தெருவுக்கு வருவார்..

இந்நிலையில் தளபதி அரசியலுக்கு வந்து மக்களுக்காக அளப்பரிய பணிகளை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்க கூடிய சமயத்தில் விஜய் உருப்படாமல் நடுத்தெருவிற்கு தங்களைப் போல வந்து சிரமப்பட வேண்டும் என்ற சாபத்துக்கு ஆளாக இருக்கக் கூடிய விஷயம் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். நல்லவர்கள் என்று யாரையும் இன்று நம்ப கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக உள்ளது என்றும் சொல்லலாம்.

அந்த வகையில் விஜய்யின் வீட்டில் நம்பகத்தன்மையோடு நீண்ட நாட்கள் வேலை பார்த்து வந்த ஏசி குமார் என்ற நபர் மீது கொண்டிருந்த மிக நல்ல ஐப்பிராயத்தின் காரணத்தால் தன் வீட்டு அருகிலேயே ஒரு வீட்டை பார்த்து அவரை குடும்பத்தோடு கொண்டு வந்து வாழ வைத்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில் ஏசி குமார் தான் நடிகர் விஜயின் அப்பாவிற்கு அடிக்கடி சிலவற்றைக் கூறி விஜய்க்கும் அவருக்கும் டக்கப் வாரை ஏற்படுத்தி விடுகிறார் என்ற விஷயத்தை புஸ்ஸி ஆனந்த் கொளுத்தி போட்டு விட்டார்.

விஜய் வீட்டில் நடந்த கூத்து..

இந்த விஷயத்தால் காண்டாகி போன நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா? தன் வீட்டுக்கு அருகில் குடி வைத்திருந்த அந்த ஏசி குமாரின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து ஏசி குமாரின் மனைவி எங்களை எப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்தீர்களோ அது போல் விஜய் நடுத்தெருவுக்கு வருவார் என சாபம் விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் கேட்பார் பேச்சைக் கேட்டு விஜய் தவறாக செயல்பட்டு வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது பிடிக்காமல் அவரது மனைவி ஒரு பக்கம் குழந்தைகள் ஒரு பக்கம் என தனித்து விடப்பட்டு இருக்கும் சூழலில் விஜயின் இந்த போக்கு கடுமையான அதிர்ச்சியை பலர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

சாபமிட்ட மனைவி என்னாச்சு..

அத்தோடு என்ன நடந்தது என்று தெரியாமல் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் ஒருவர் சொன்னார் என்ற சொல்லைக் கேட்டு தங்களை வீட்டை விட்டு அனுப்பிய விஜய் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார் என்று யோசிக்க வைத்துள்ளது.

 

அது மட்டுமல்லாமல் இது வரை யாருடைய சாபத்திற்கும் ஆளாகாமல் இருந்த விஜய் தற்போது ஏசி குமாரின் மனைவியின் சாபத்தை வாங்கி கட்டி இருப்பதால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் கதி கலங்கி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top