Connect with us

News

தொடர்ந்து பரவும் நெகட்டிவிட்டி.. GOAT படக்குழு எடுத்துள்ள புது ஆயுதம்..!

By TamizhakamAugust 7, 2024 9:54 PM IST

மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்புகள் இருந்ததோ அதே அளவிற்கு தற்சமயம் கோட் திரைப்படம் குறித்து வரவேற்பு குறையவும் துவங்கியிருக்கிறது.

விஜய் இறுதியாக இரண்டு திரைப்படங்கள்தான் நடிக்க உள்ளார் என்று பேச்சு வந்த நிலையில் இருந்து அவர் நடிக்கும் அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அதிக வரவேற்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் கோட்.

சயின்டிஃபிக்ஷன் திரைப்படமான இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். படத்தில் மூன்று விஜய் இருக்கிறார் என்பதே பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மூன்று விஜய் காம்போவில் ஒரு படம் வருகிறது என்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது.

எதிர்மறை விமர்சனங்கள்:

ஆனால் இந்த திரைப்படம் குறித்த பாடல்கள் வெளியாக துவங்கியதிலிருந்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்கள் வலம் வர துவங்கின. முதல் பாடலான விசில் போடு வெளியான பொழுது அந்த பாடல் நினைத்த அளவிற்கு திருப்திகரமாக இல்லை என்று பேச துவங்கினர் ரசிகர்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு சரியாக இசையமைத்து கொடுக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இரண்டாவது பாடல் அதை முறியடித்தது. பவதாரணியின் குரலை ஏ.ஐ முறையில் கொண்டு வந்து வெளியிட்டு இருந்த இரண்டாவது பாடல் அதிக வரவேற்பு பெற்றத.

தற்சமயம் வந்த மூன்றாவது பாடலான ஸ்பார்க் மீண்டும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தும் பாடலாக அமைந்திருக்கிறது. இந்த மூன்றாவது பாடலில் டீஏஜ் செய்யப்பட்ட இளமையான விஜய் தோன்றுகிறார். ஹாலிவுட்டில் நடிகர்களை டீ ஏஜ் செய்வது போலவே இந்த திரைப்படத்திலும் விஜய்யை செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பாடல்:

மேக்கப் முறையில் செய்யாமல் கிராபிக்ஸ் முறையில் பயன்படுத்தி இதை செய்திருக்கிறார்கள். ஆனால் அது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை பார்ப்பதற்கு விஜய் நன்றாகவே இல்லை என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர் ரசிகர்கள்.

இது படத்திற்கு மேலும் ஒரு எதிர்மறையான விஷயமாக அமைந்தது இதேபோல ஹாலிவுட்டில் சோனிக் என்கிற திரைப்படம் வெளியான பொழுது அந்த திரைப்படத்திலும் சோனி கதாபாத்திரம் நன்றாகவே இல்லை என்று டிரைலர் வெளியான பொழுது ரசிகர்கள் குறை கூறினார்கள்.

அதனை தொடர்ந்து மொத்த படத்திலும் மீண்டும் சோனிக்கின் கதாபாத்திரத்தை கிராபிக்ஸ் முறையில் மாற்றி அமைத்தனர் இப்பொழுது அதேமுறையைதான் இயக்குனர் வெங்கட் பிரபு பின்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் இந்த முறையை சரியாக செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம் வெங்கட் பிரபு. இந்த நிலையில் இளமை விஜய் சரி செய்யப்பட்ட  நிலையில் உள்ள ட்ரெய்லரை அடுத்து வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

இந்த டைலரை விஜய் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகவும் கூறிவிட்டாராம் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு அவர்களது ஆவலை பூர்த்தி செய்யும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top