Connect with us

News

200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

By TamizhakamFebruary 28, 2024 4:58 PM IST

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்தவர். மூன்று தலைமுறைகளை கண்ட நடிகராக இப்போதும் நடிக்கிறார்.

விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் நடிக்க வருவதற்கு முன்பே, அவரது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிக்கு அனிதா, கவிதா, அருண்விஜய் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர்.

அடுத்து சினிமாவில் நடித்த போது, நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் உள்ளனர்.

முதல் தாரம் மூன்று பிள்ளைகள்

விஜயகுமார் தனது முதல் தாரத்தின் மகள்கள் அனிதா, கவிதா இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். மகன் அருண் விஜயை நடிப்புத்துறைக்கு கொண்டு வந்து ஹீரோவாக ஆக்கினார்.

ஆனால் மஞ்சுளாவின் மகள்கள் மீது பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்று இப்போது புகார் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.

பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு

வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா ஆகியோரை அவர் நினைத்திருந்தால் அதே போல் டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என பெரிய படிப்புகளை படிக்க வைத்திருக்கலாம் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜயகுமார் இல்லத்தில், அவரது பேத்தி தியாக திருமணம் கோலாகலமாக பெரிய அளவில் பிரமாண்டமாக நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் – மீனா

இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வந்து கலந்துக்கொண்டனனர்.

டாக்டர்கள் குடும்பம்

நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. அவர்களது மகள் அனிதா டாக்டர்தான். அவரது மகள் தியாவும் டாக்டர்தான். அவர் திருமணம் செய்து கொண்டதும் டாக்டர்தான். இது காதல் திருமணம்தான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துதான் திருமணம் செய்துள்ளனர்.

இதில் தாய்மாமன் சீர் என்ற வகையில், அனிதாவின் தம்பி நடிகர் அருண்விஜய் நிறைய நகைகள் உள்பட சீர்வரிசை அள்ளி தந்திருக்கிறார்.

200 கோடி ரூபாய்

திருமண நிகழ்வுகள் ஒரு வாரத்துக்கு மேல் நடந்திருக்கிறது. திருமணத்தில் பங்கேற்ற உறவுகளுக்கு மிகப்பெரிய அளவில் தினமும் தடபுடல் விருந்து, உயர்தரத்தில் ஆடைகள், அணிகலன்கள், நகைகள் என ஏகப்பட்ட செலவுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் நான்கு பேருடன் சிட்டு நடிகை.. மது போதையில் கன்றாவி.. நாறிப்போன கார் பார்க்கிங்..

இந்த திருமணத்துக்காக 200 கோடி ரூபாய் வரை செலவு செய்தததாகவும், இதில் வரதட்சணையாக மட்டும் அதில் பெரும்பகுதி தரப்பட்டதாகவும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top