திரைப்படங்களில் ஆதிக்கத்தை விட youtube சேனல்களின் ஆதிக்கம் என்று அதிகரித்து வருவதை அடுத்து வில்லேஜ் குக்கிங் சேனலில் சமையலை செய்யும் தாத்தா பெரிய தம்பி தற்போது மருத்துவமனையில் இருப்பதாக திரும்பிய செய்திகள் வந்துள்ளது.
அதிக அளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இந்த youtube சேனலுக்கு 2.4 கோடி சப்ஸ்க்ரைபர்கள் இருப்பதால் இது ஒரு முக்கிய சேனலாக இன்று உருவெடுத்து இருக்கிறது.
வில்லேஜ் குக்கிங் தாத்தா..
இந்த குக்கிங் சேனலில் பல்வேறு பதத்தங்களை சமைத்து காட்டும் தாத்தா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தியோடு இந்நிகழ்ச்சியில் கலந்து அவருக்கு உணவினை சமைத்துக் கொடுத்தார்.
இதனை அடுத்து இந்த சேனலின் புகழ் தமிழகத்தை தாண்டி உலகம் எங்கும் பரவியதோடு பல ரசிகர்களை கொண்டிருக்கிறது. வயதானாலும் பெரிய தம்பி தாத்தா வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு செய்யும் சமையல் ஸ்டைலை பார்க்க என்று ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.
உடல் நிலைக்கு என்ன ஆச்சு..
இந்நிலையில் இந்த தாத்தாவிற்கு கடந்த மார்ச் மாத இறுதியில் திடீர் என உடல் நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொன்ன நிலையில் ராகுல் காந்தியிடம் வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு உதவி கேட்டதாகவும் இருப்பினும் ராகுல் காந்தி உதவ மறுத்து விட்டதாகவும் பொய்யான செய்திகள் இணையங்களில் பரவியது.
இது குறித்து இந்த சேனல் தற்போது விளக்கம் அளித்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இது முற்றிலும் பொய் எங்களது வளர்ச்சிக்கு உதவிய அற்புத மனிதர் ராகுல் மீது இப்படி அவதூறை பரப்புவது மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
உடனே லயனுக்கு வந்த பிரபலம்..
இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து விட்டு ஓய்வெடுத்து வரும் வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா மீண்டும் சமையலில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார்.
ஓய்வுக்கு பிறகு தாத்தா பெரிய தம்பி வில்லேஜ் குக்கிங் சேனல் வீடியோ ஒன்றில் வந்துள்ளார். அதில் அவர் தெளிவாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதில் தாத்தா எனக்கு உடம்பு முடியாத காலத்தில் பலரும் மெசேஜ் மற்றும் கால் செய்து ஆறுதல் சொன்னது போலவே தம்பி ராகுல் காந்தியும் போன் செய்து நலம் விசாரித்து இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் எனக்கு ஒன்றும் ஆகாது பூரண குணம் அடைவீர்கள் என்று சொல்லி அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் மருத்துவமனையில் இருந்த போது பலரும் என்னை நினைத்து கண்ணீர் விட்டு அழுது இருக்கிறீர்கள். உங்கள் புண்ணியத்தால் நான் இன்று மீண்டு வந்து விட்டேன் என வீடியோவில் சொல்லிய விஷயமானது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
மேலும் தாத்தா பெரிய தம்பி பல ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு இந்த சேனலில் வருவார் என சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.