Connect with us

News

«என்ன பண்ணியும் இன்னும் திருமணம் செட் ஆகலையா..! – No Tension இந்த கோயிலுக்கு போங்க..!

By TamizhakamMärz 24, 2023 5:00 AM IST

வயது 35, 40 – தை நெருங்கி விட்டது. இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படக்கூடிய ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கட்டாயம் இந்த திருத்தலங்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த களத்திர தோஷம் நீங்கி கண்டிப்பாக சீக்கிரமே திருமணம் நடக்கும்.

அப்படி உங்களுக்கு எளிதில் திருமணம் நடக்க நீங்கள் செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா? அது பற்றி இப்போது இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சீக்கிரம் திருமண யோகத்தை தரும் கோயில்கள்

திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இருக்கும் இவரின் சன்னதிக்கு நீங்கள் சென்று வந்தால் உங்கள் திருமண தடை மிக விரைவில் நீங்கி உங்களுக்கு திருமணம் நடக்கும். இந்த திருக்கோயில் ஆனது சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அதுபோலவே நீங்கள் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் உங்கள் திருமணம் தடை பெற்று வருகிறது என்றால் கட்டாயம் நீங்கள் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் இருக்கும் முருகப்பெருமானை தரிசித்து விடுங்கள்.

 இங்குதான் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகிறது. இந்தக் கோயிலுக்கு நீங்கள் சென்று முருகப்பெருமானை வணங்குவதின் மூலம் செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் உங்களுக்கு திருமணம் ஆகும்.

அடுத்ததாக ராமநாதபுரத்தில் அமைந்திருக்கும் உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு நீங்கள் சென்று அங்கு இருக்கும் மங்களநாயகி மற்றும் மங்கள நாத சுவாமியை தரிசனம் செய்து விடுங்கள். இத்தலத்தின் சிறப்பு இறைவனும் இறைவியும் சுயம்புவாக தோன்றியவர்கள்.

 இங்கிருக்கும் லிங்கங்களை வழிபடுவதன் மூலம் உங்களது திருமணத்தடை விலகும். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 71 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.

நீங்கள் முடிந்தவரை இந்த மூன்று திருக்கோயிலுக்கும் சென்று உங்கள் வேண்டுதலை வைத்துவிட்டு வாருங்கள். எண்ணி மூன்று மாதத்தில் நீங்கள் நினைத்தபடி உங்களுக்கு வாழ்க்கைத் துணை வந்து அமையும். உங்கள் இல்லறம் நல்லறமாக உயரும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top