Connect with us

News

பேச முடியாமல் அழுத சித்தார்த்.. கண்முன் தோன்றிய விவேக்.. தொட்டு FEEL பண்ண மனைவி..

By TamizhakamJuli 29, 2024 7:53 PM IST

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டம் முதலே விவேக்கும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

இயக்குனர் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் கூட பாலச்சந்தரிடம் மிகவும் அமைதியாகதான் பேசுவார்கள். அந்த அளவிற்கு பெரும் இயக்குனரான கே பாலச்சந்தரிடம் சரிக்கு சமமாக பேசக்கூடிய ஒரு நடிகராக விவேக் இருந்திருக்கிறார்.

விவேக்கிற்கு இருந்த செல்வாக்கு:

ஒரு காமெடி நடிகருக்கு எதற்காக பாலச்சந்தர் அவ்வளவு உரிமை கொடுத்திருந்தார் என பார்க்கும் பொழுது விவேக்கின் அறிவுக்கு கொடுத்த மதிப்பு தான் அது என்று கூறப்படுகிறது. அப்போதே நிறைய விஷயங்களில் விவேக் தனித்துவமான நபராக இருந்தார். இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர் எழுதும் கதைகள் தொடர்பான விமர்சனங்களை கூட விவேக்கிடம்தான் கேட்பார் என்று கூறப்படுகிறது.

ஒரு சாதாரண காமெடி நடிகர் என்பதையும் தாண்டி தொடர்ந்து சமூக விழிப்புணர்வு கொண்டவராக நடிகர் விவேக் இருந்து வந்தார். தொடர்ந்து தனது நகைச்சுவைகளின் வழியாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்வதை விவேக் தன்னுடைய வேலையாக கொண்டிருந்தார்.

ஆரம்பகட்டத்தில் நாடகங்கள் உருவான பொழுது இப்படித்தான் நாடகங்களின் வழியாக விழிப்புணர்வுகளை மக்களுக்கு கடத்தி வந்தனர் அதையே விவேக்கும் செய்து வந்தார். அப்துல்கலாமின் தீவிர ரசிகராக இருந்த விவேக் தொடர்ந்து அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்ற நினைத்தார்.

தொடர்ந்து பொதுப்பணி:

அப்துல்கலாமை பார்த்து இவரும் நிறைய மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதை நிறைய இடங்களில் பரப்பவும் செய்தார் இதனால்தான் விவேக்கின் இழப்பு என்பது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக்கை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரவழைத்து இருக்கின்றனர். அது பலருக்குமே நெகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருந்தது. இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனலான பிகைன்ட் வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் விவேக்கிற்கு ஒரு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை வாங்குவதற்காக விவேக்கின் மனைவி வந்திருந்தார் அப்பொழுது விவேக்கை வைத்து ஒரு வி.ஆர் வீடியோ ஒன்றை தயார் செய்திருந்தனர் அவரது குடும்பத்தினர். அந்த வீடியோ மூலமாக விவேக்கின் மனைவி தனது கணவரை தொட்டு பார்த்தார். மேலும் அதில் பேசிய விவேக் நமது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று சிறப்பாக நடத்தினீர்கள்.

நான் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் சிரிப்பின் வழியாக நானும் உங்களோடு இருந்து கொண்டிருக்கிறேன் என்று பேசி இருந்தார். இதை பார்த்து நெகிழ்ந்த நடிகர் சித்தார்த் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார். மேலும் விவேக்கின் மனைவியும் அழ துவங்கிவிட்டார் இதனை தொடர்ந்து இந்த வீடியோ இப்பொழுது பிரபலமாகி வருகிறது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top