“ப்ளீஸ்.. விட்டுருங்க..” கதறியும் கேக்கல.. சன் மியூசிக்கில் நடந்த கொடுமை குறித்து VJ மணிமேகலை..!

வெள்ளிக்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் அவர்களை பிரபலமாக நினைக்கிறார்களோ அது போல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக திகழக்கூடிய அவர்களுக்கும் அதே அளவு மரியாதை தற்போது கிடைக்கிறது. அந்த வகையில் VJ மணிமேகலை ஒரு மிகச்சிறந்த வீடியோ ஜாக்கியாக திகழ்கிறார்.

இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய் இணைவதற்கு முன்பு சன் நெட்வொர்க்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

VJ மணிமேகலை..

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி ஆக விளங்குகிறார். மேலும் கோயம்புத்தூரில் படித்த இவர் சென்னைக்கு குடிப்பெயர்ந்ததை அடுத்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ முடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்தோடு விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் இவர் பங்கேற்று ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் இவர் கல்லூரியில் படிக்கும் போது சன் மியூசிக் வீடியோ ஜாக்கியாக அறிமுகம் ஆனதை அடுத்து நடன இயக்குனரான ஹுசைன் ஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சன் மியூசிக்கில் நடந்த கொடுமை..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் திரைப்பட நடிகை ரேஞ்சுக்கு பிரபலமானார். மேலும் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: நான் குனியும்போது அது தெரிஞ்சா தான் உண்டு.. மத்தபடி.. நடிகை நீலிமா ராணி நச் பதிலடி..!

இதனை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நீங்கள் எத்தனை பேரிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு தொகுப்பாளினியாக இருந்த தொலைபேசி அழைப்பை நான் மறக்கவே மாட்டேன் என்றால் எதை கூறுவீர்கள் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஜய் VJ மணிமேகலை ஒரு முறை ஒரு அம்மா எனக்கு போன் செய்தார்கள். வழக்கமாக பேசிவிட்டு என்னுடைய மகன் என்ன படித்துக் கொண்டு இருக்கிறார்.. இன்னும் சில மாதங்களில் கேம்பஸ் என்று செலக்ட் ஆகி விடுவான்.. வேலை கிடைத்துவிடும்.. என்றெல்லாம் கூறினார் நானும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டே இருந்தேன்.

இதனை அடுத்து அவர் என்னிடம் என்ன படிக்கிறேன்.. எங்கு படிக்கிறேன்.. என்ற விவரங்களை கேட்டார். நானும் சொன்னேன் அதன் பிறகு எந்த கல்லூரியில் படிக்கிறேன் என்று கேட்டார். நிகழ்ச்சி விதிமுறையின் படி நான் என்ன கல்லூரியில் படிக்கிறேன், என்னுடைய விலாசம் போன்றவற்றை கூறக்கூடாது. அதனால் நான் சொல்லாமல் தவித்தேன்.

அடுத்த நிமிடமே உன்னை பெண் கேட்க வேண்டும். உன்னுடைய அம்மாவிடம் பேச வேண்டும். உன்னுடைய அப்பாவிடம் பேச வேண்டும். எங்கு வந்து பேச வேண்டும் என்று கேட்டார்.

ப்ளீஸ் விட்டுடுங்க கதறியும் கேட்கல..

இதனை அடுத்து அவர் பேசிய பேச்சு என்னை தூக்கி வாரிப் போட வைத்தது. என்ன கொடுமை இது. இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா? அல்லது தெரியாமல் பேசுகிறார்களா? ஒன்றும் புரியவில்லையே என்று புலம்பினேன்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

நானும் ஏதேதோ செய்கை காட்டி சன் மியூசிக் ஸ்டுடியோவில் இருந்து அனைவரிடமும் இந்த காலை கட் பண்ண சொல்லி கெஞ்சினேன் ஆனால் அவர்கள் இதனை ஒரு காமெடியாக எடுத்துக் கொண்டு தொலைபேசி அழைப்பை துண்டிக்காமல் தொடர்ந்து பேச விட்டார்கள்.

எனவே இந்த போன் காலை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்று விஜே மணிமேகலை கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …