Connect with us

News

«உயர் ரத்த அழுத்தம் இருக்கா..!» – அப்ப இந்த யோகாவ தினமும் செய்யுங்க..!!

By TamizhakamMärz 20, 2023 3:00 AM IST

உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக உங்கள் இதயம், சிறுநீரகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் இந்த உயர் ரத்த அழுத்தத்தை ஒரு சைலட் கில்லர் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

இப்போது மாறிவிட்ட பழக்க வழக்கத்தினால் இந்த உயர் ரத்த அழுத்தம் என்பது இளைஞர்களுக்கும் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் இவர்களின் வேலைப்பளு என்று கூடி கூறலாம்.

எனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆரோக்கியமான சமச்சீர் உணவை உட்கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்வதோடு வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்வதின் மூலம் இதனை எளிதில் சரி செய்ய முடியும்.

அந்த வகையில் யோகா கலையை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை மிக எளிதாக குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அப்படி எந்த யோகாவை நீங்கள் தினமும் செய்தால் உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் யோகா

சக்ரவாகசனம்

மேற்கூறிய யோகாசனத்தை நீங்கள் செய்யும் போது உங்கள் உடல், தோள் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் அது மட்டுமல்லாமல் இதை செய்வதற்கு உங்கள் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்த வேண்டும். மேலும் உங்கள் மணிக்கட்டுப் பகுதியில் தோளுக்கு கீழேயும் உள்ளங்கைகள் முழங்கால்களை நோக்கி இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும். மேலே பார்க்கும்போது மூச்சை இழுத்து விட வேண்டும்.

வயிறானது தரையை நோக்கி இருத்தல் நலன் தரும். உங்கள் தொப்புளை உங்கள் முதுகெலும்பை நோக்கி இழுத்து முதுகெலும்பின் மேற்பகுதியை நோக்கி வளைக்கும் போது மூச்சு விடுங்கள். இது பார்ப்பதற்கு பூனை நிற்பது போல இருக்கும்.

புஜங்காசனம்

இந்த ஆசிரமானது பார்ப்பதற்கு நாகபாம்பு போஸ் தருவது போல இருக்கும். புஜங்காசனம் செய்வதின் மூலம் வயிற்றுப் பகுதி கீழ் நோக்கி இருக்க வேண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இது உதவி செய்கிறது.

 தரையில் குப்புற படுத்து கால்களை நீட்டி இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மார்பை மேலே உயர்த்த வேண்டும் இதன் மூலம் உங்கள் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு என்னற்ற நன்மைகளும் கிடைக்கும்.

சுகாசனம்

மிகவும் எளிய ஆசனமான சுகாசனம் நீங்கள் செய்யும் போது உங்கள் முதுகை நிமுர்த்தி 90 டிகிரியில் வைத்துக் கொண்டு சம்மனங்கால் போட்டு உட்கார வேண்டும்.

 அடுத்து கண்களை மூடி சில நிமிடங்கள் மூச்சை உள்ளெடுத்து வெளியே விட வேண்டும்.இது மன அழுத்தத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் மூளை செயல் திறனையும் அதிகரித்து உங்கள் ரத்த ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும்.

இந்த மூன்று ஆசனங்களையும் நீங்கள் தொடர்ந்து தினமும் ஒரு  அரை மணி நேரமாவது செய்வதின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை மருந்து இல்லாமல் போதுமான அளவு உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top