சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டுக்காக கடுமையான போட்டியினை ஏற்படுத்தி மற்ற சேனல்களுக்கு சவால் விடக் கூடிய வகையில் நல்ல கதையம்சம் உள்ள சீரியல்களை இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய வகையில் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த சேனலாக உருவெடுத்து வருகிறது.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடர் 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்ரீரஞ்சனி, சௌந்தர்யா ரெட்டி மற்றும் ஆர்யன் முக்கிய வேடங்களில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள்.
மேலும் இந்த தொடர் தெலுங்கு தொலைக்காட்சியான ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த ராதம்மா குத்துருவின் என்ற சீரியலின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியாது.மூன்று பெண் பிள்ளைகளை மையமாகக் கொண்ட இந்த கதை கணவன் இல்லாமல் ஒரு பெண் தன் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார்.
அதற்கு எது மாதிரியான இன்னல்களை சந்திக்கிறார் என்பதை மிகச் சிறப்பாக காட்டியுள்ளது. இந்த சீரியலானது தினமும் இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படிப்பட்ட மகத்தான சீரியலான மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சண்டை போட்டுக் கொண்ட இரண்டு நடிகைகள் குறித்து சில தகவல்கள் கசிந்து உள்ளது.
இதில் இவர்களது சண்டைக்காக பல்வேறு காரணங்கள் வெளி வந்த நிலையில் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது இணையத்தில் வெளி வந்து இதற்கெல்லாம் சண்டை போடுவார்களா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.
அந்த இரு நடிகைகளுக்கும் இடையே எதனால் சண்டை வந்தது என்று பார்த்தால் முதலில் யார் சோபாவில் அமர வேண்டும் என்ற பிரச்சனை தான் பெரிதாகி விஸ்வரூபமாய் பெரிய சண்டைகள் முடிந்து போய் இருக்கிறது.
வெறும் வாயால் ஏற்பட்ட இந்த சண்டை முற்றி, வாக்குவாதம் முடிந்து பெரிய கலவரத்தை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். இதை எடுத்து ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேட்டிருப்பதோடு கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நெட்டிசன்களும் காரி துப்பி வருவது தற்போது இணையங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது என கூறலாம்.