சித்திரை கனி சிறப்பு

தமிழ் மாதத்தின் தொடக்க மாதம் தையா? இல்லை சித்திரையா? என தர்க்கத்துக்கு உள்ளன  சித்திரை மாதத்தின் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலத்தையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம். மேலும் சீர் தூக்கி வரும் சித்திரை முதல் நாளில் கனிகளை வைத்து பூஜை செய்வது வழக்கமாக பின்பற்றி வருகிறோம்.

முக்கனிகளும்  இந்த காலத்தில்  அதிக அளவு  விளைவதால் பங்குனி கடைசி நாள் இரவே  கனிகளை தட்டத்தில் வைத்து  பூஜை அறையில் கணிப்பு வைத்து அலங்காரம் செய்து வைத்துவிடுவது இன்றும் தமிழர்கள் வீட்டிலும் குறிப்பாக கேரளத்து  மக்கள் மிக விமர்சையாக கொண்டாடும் விஷசமாக விஷுக்கனி  இருக்கிறது.

கனி காணும் முறை

பூசை அறையில் முக்கனிகள் மட்டுமல்லாமல் ஒரு கண்ணாடியில் கொன்றை மலர்களை வைத்து அலங்கரித்து வெற்றிலை, பாக்கு, உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர்.

பின்னர் உறங்க சென்று விட்டு மறு நாள் காலையில் எழுந்த  சென்று பூஜை அறையில் வைக்கப்பட்ட பொருட்களில் கண் விழிப்பர்.

இதனை விசு கனி காணுதல் என்று கூறுவார்கள் மேலும் தமிழில் கனி பார்த்தல் என்றும் அழைப்பார்கள்.

இந்த நாளில் வேப்பம்பூ, வெல்லம், மாங்காய் முதலியவற்றை கொண்டு சித்திரை பச்சடி தயாரித்து பரிமாறப்படுகிறது. இத்தோடு பல வீடுகளில் பழ பாயசம் செய்வது வழக்கம்.

சித்திரை கனி என்று கைநீட்ட காசு   ஆண்டுகள் முதல் பெற்றோர்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த கார்களை அனைவரும் சேமிப்பில் சேர்த்து வைத்து அவர்களாகவே பயன்படுத்துவார்கள் செலவு செய்யமாட்டார்கள்.

சித்திரைக் கனி என்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.இதனை கேரளாவில் விஷு புண்ணிய காலம் என்று கூறுவார்கள்.

இத்தினத்தில் புத்தாடை அணிந்து, குல தெய்வ கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்வதால்  ஆண்டு முழுவதும் நற்பலன்கள் கிடைக்கும் என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …