இந்த பதிவில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட சீரியல் நடிகைகள் பற்றிய தகவலை தான் பார்க்க போகிறோம்.
பாவனி ரெட்டி
இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது நடிகை பாவனி ரெட்டி. மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்த நடிகை பாவனி ரெட்டி தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு சீரியல் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து தன்னுடன் நடித்த சக நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் வாழ்க்கையின் மீது ஏற்பட்ட பிடிப்பின்மை காரணமாகவும் பாவனி ரெட்டியின் கணவர் பிரதீப் அவருடைய வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருடைய இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
தொடர்ந்து சில காலம் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை பாவனி ரெட்டி, தமிழில் சின்னத்தம்பி என்ற சீரியலில் அறிமுகமானார்.
இடையில் ஆனந்த் என்பவருடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்பட்டது. அவரையே திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி ரெட்டி அதன் பிறகு நடிகர் நடன இயக்குனர் அமீருடன் நெருக்கமாக இருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சகட்டமாக இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
மைனா நந்தினி
தமிழில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. மைனா என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
நல்ல அடையாளமாகவும் இருந்தது. எனவே தன்னுடைய பெயரை மைனா நந்தினி என்று மாற்றிக்கொண்டார் அம்மணி. இடையில் மணிகண்டன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் நடிகை மைனா நந்தினியும் அவருடைய தவறான நடத்தையும் தான் என்று மணிகண்டனின் தாயார் குற்றம் சாட்டி இருந்தார்.
அந்த குற்றச்சாட்டுகளில் மைனா நந்தினியின் பெயர் களங்கப்பட்டது. அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளில் பிஸியாக இருந்த மைனா நந்தினி தற்போது சக சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பதை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.
நித்யா ராம்
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிறிந்தனர்.
அதன் பிறகு சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அம்மணி கடந்த 2019 ஆம் ஆண்டு கௌதம் என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பிரியங்கா நல்காரி
தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் சீரியலில் நடிக்கும் போது திருமணம் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களுடைய திருமணத்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி.
திவ்யதர்ஷினி
அடுத்ததாக அனைவருக்கும் தெரிந்த திவ்யதர்ஷினி இவர் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில ஆண்டுகள் கூட இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. திவ்யதர்ஷினி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவருக்கு நான் வரன் தேடல் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்ப நண்பர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவலகள் எதுவும் வெளியாகவில்லை.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.