சன் டிவிக்கு போட்டிய விஜய் டிவியில் 4 புது சீரியல்கள்.. எகிறப்போகும் டிஆர்பி குஷியில் ரசிகர்கள்..

திரைப்படங்களை பார்க்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வரக்கூடிய இந்த வேளையில் இல்லத்தரசிகளை கட்டிப் போட வைத்திருக்கும் சீரியல்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

vijay tv 1

காலை முதல் இரவு வரை பல்வேறு தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சீரியல்கள் தினம் தினம் ஒளிபரப்பாகி ஒவ்வொருவரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது.

சன் டிவிக்கு போட்டிய விஜய் டிவியில் 4 புது சீரியல்கள்..

அந்த வகையில் சன் டிவிக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் விஜய் டிவி தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் பல ரியாலிட்டி ஷோக்களை தந்து அசத்தி வரக்கூடிய இது சீரியல்களிலும் கான்சென்ட்ரேஷன் செய்ய ஆரம்பித்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை தொடரானது தற்போது டிஆர்பி ரேட்டில் டாப்பில் இருந்து வருவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

vijay tv 2

அதுபோலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இளசுகளின் மத்தியிலும் பெரியளவு வரவேற்பு கிடைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் நல்ல ரசிகர் வட்டாரமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் நீண்ட நெடு நாட்களாக ஒளிபரப்பாகி வந்த முத்தழகு தொடர் முற்றுப்பெற உள்ளது என்ற கவலையான செய்தி வெளிவந்திருக்கும் சமயத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய வகையில் மற்றொரு செய்தியையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் முத்தழகு தொடர் முடிவு பெற்ற பிறகு தொடர்ந்து புதிய சீரியல்கள் விஜய் டிவியில் வலம் வர இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

எகிறப்போகும் டிஆர்பி குஷியில் ரசிகர்கள்..

அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு புதிய தொடர்கள் விஜய் டிவியில் அடுத்தடுத்து வெளிவர போவதாகவும் அந்தத் தொடர்களால் கட்டாயம் டிஆர்பி எகிறி அடிக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள்.

vijay tv 1

மேலும் இந்த தொடர்களை டெல்லி ஃபேக்டரி, வீனஸ், இன்ஃபோ என்டர்டைன்மென்ட், குளோபல் வில்லேஜர் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க உள்ள நிலையில் புதிய தொடர்களில் விஜய் டிவி காலம் இறங்கி சன் டிவிக்கு கொடுக்க உள்ளது.

மேலும் அந்தத் தொடர் பற்றிய விவரங்கள் இயக்குனர்கள் நடிகர்கள் யார்? யார்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இந்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று சொல்லலாம்.

பிறகென்ன விஜய் டிவியை பார்த்து வரும் சீரியல் ரசிகர் பட்டாளம் விரைவில் வரவிருக்கும் நான்கு சீரியல்களை பார்க்க இப்போது இருந்தே தங்களை தயார் படுத்தி விட்டார்கள். அத்தோடு சீரியல்கள் எப்போது வரும் என்ற ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam