பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எப்பொழுதும் அதில் காதல் ஜோடிகள் என்று யாராவது ஒருவர் இருப்பார்கள். அவர்களை வைத்து நிகழ்ச்சி இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக கொண்டு செல்வார்கள்.
ஒருவேளை காதல் ஜோடி என்று யாருமே இல்லாவிட்டாலும் கூட அங்கு சென்ற பிறகு யாராவது இருவர் காதலித்து வருவார்கள். அதன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும். போன முறை கூட ரவீனாவும் அவரது காதலர் மணியும் சேர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தனர்.
பிள்ளை இருக்குன்னு கூட பார்க்கல
ஆனால் இந்த முறை பிக் பாஸில் காதல் ஜோடிகள் என்று யாருமே செல்லவில்லை. அதேபோல நிகழ்ச்சிக்குள் இருப்பவர்களுக்கும் இப்போது வரை காதல் என்று எதுவும் உருவாகவில்லை. அதற்கு ஏற்ற வயதில் யாரும் உள்ளே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இளம் நபராக சென்றிருக்கும் ஜெஃப்ரியை விட மற்ற பெண்களுக்கு வயது அதிகமாக இருப்பதால் ஒருவேளை ஜெஃப்ரிக்கும் சாச்சனாவுக்கும் இடையே வேண்டுமானால் காதல் கதை உருவாகலாம். அதற்கும் கூட வாய்ப்புகள் குறைவு தான் என்று கூறப்படுகிறது.
என் புருஷனும் அன்ஷிதாவும்
எனவே காதல் கதையே இந்த முறை பிக் பாஸ் சீசன் 8-ல் இருக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் வெளியிலேயே ஏற்கனவே காதலிலிருந்து உள்ளே சென்ற ஒரு ஜோடி இந்த பிக் பாஸில் உண்டு. அவர்கள்தான் அர்னவ் மற்றும் அன்சிதா. இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தது.
அதனை வெளிப்படுத்தும் விதமாக அவரது மனைவி திவ்யா ஸ்ரீதர் பல விஷயங்களை முன் வைத்து இருக்கிறார். திவ்யா ஸ்ரீதர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமானவர். இவருக்கும் அர்னவுக்கும் இடையே திருமணம் நடந்தது.
மனம் நொந்த அர்னவ் மனைவி
அதற்குப் பிறகு தனது மனைவியை விட்டுவிட்டு அன்சிதாவுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து அவர் கூறும் பொழுது நான் கர்ப்பமாக இருந்த பொழுது அன்சிதா எனது குழந்தை குறித்தே தவறாக பேசினாள்.
எனது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடும் என்றெல்லாம் கூறினாள். ஆனால் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அருனவ் அமைதியாக நின்றான் நமது குழந்தை பற்றி தவறாக பேசுகிறாள் நீ என்ன அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டேன்.
அப்பொழுது கூட அவளுக்கு ஆதரவாகதான் அவன் பேசினான். என்னை ஏகப்பட்ட கொடுமைகள் அவன் செய்திருக்கிறான் நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான். எனது தோழி ஒருவரின் வீட்டில் தான் அப்பொழுது நான் தங்கியிருந்தேன் என்று பகீர் கிளப்பும் உண்மைகளை கூறியிருக்கிறார் அர்னவ் மனைவி.