Connect with us

தொலைக்காட்சி

பெண்களுடன் லீலை.. கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய சீரியல் நடிகர்!! அதிர்ந்து போன ரசிகர்கள்..

By Brindha IyerOctober 1, 2024 10:05 AM IST

ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்ற பழமொழியை சும்மாவா சொல்லி வைத்தார்கள். அப்படித்தான் திருந்தாத ஆண்கள் இந்த சமுதாயத்தில் இருப்பதால் தன் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சீரியல் நடிகர் குறித்து அதிர்ச்சிகரமான விஷயங்கள் தற்போது வெளி வந்துள்ளது.

ஏற்கனவே ஜெயம் ரவி விவகாரத்தில் பாடகி கென்னிஷாவை தொடர்பு படுத்தி இணையங்களில் அதிக அளவு செய்திகள் வெளிவந்ததோ அது போல பெண்களுடன் லீலை செய்ததாக இந்த சீரியல் நடிகர் பற்றியும் விஷயங்கள் புகைந்துள்ளது.

பெண்களுடன் லீலை.. கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய சீரியல் நடிகர்..

அந்த வகையில் இந்த சீரியல் நடிகருக்கு சன் டிவியில் ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை உள்ளது. மேலும் பிரசாந்த் போல் இவரது நடிப்பில் நெழிவு சுழிவுகள் மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுவதால் பெண் ரசிகர்கள் அதிக அளவு இவருக்கு உண்டு என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அந்த வகையில் இந்த சீரியல் நடிகர் முதன் முதலில் நந்தினி தொடரில் ஹீரோவாக நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனாய் பலரையும் தனக்கு ரசிகராக பெற்றுக் கொண்டார்.

இதனை அடுத்து கண்ணான கண்ணே சீரியலில் மீராவை தாங்கிப் பிடிக்கும் கணவராக நடித்ததை அடுத்து பெண்கள் மனதில் இடம் பிடித்தார். இப்போது அந்த சீரியல் நடிகர் யார் என்ற விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக கண்டுபிடித்தீர்கள்.

அவர் ராகுல் ரவி தான் இவர் 2020 ஆம் ஆண்டு லட்சுமி நாயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதிர்ந்து போன ரசிகர்கள்..

அப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராகுல் ரவி இணையதள பக்கங்களில் அவ்வப்போது தன் மனைவியோடு இணைந்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிப்பார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் இந்த பிரிவுக்கு காரணம் ராகுல் ரவி வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருப்பதாக செய்திகள் வேகமாக வெளிவந்தது.

அது மட்டுமல்லாமல் தனது கணவர் தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணோடு தொடர்பு இருந்த நிலையை கையும் களவுமாக அவரது மனைவி பிடித்ததோடு மட்டுமல்லாமல் போலீசில் புகார் அளித்திருக்க கூடிய விஷயம் வெளி வந்தது.

இதனை அடுத்து ராகுல் ரவி தலைமறைவு ஆகிவிட்டதாக விவகாரம் பரபரப்பாக பேசப்படுவதோடு இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியான நிலையில் தற்போது சன் டிவியில் மருமகள் தொடரில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top