அடடா.. இந்த சீரியலுமா? சன் டிவியை விட்டு வெளியேறுகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!..

தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வரக்கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியல்கள் அனைத்தும் இல்லத்தில் இருக்கும் இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல் தற்போது அனைவரையும் கட்டி போட வைத்துவிட்டது.

malar 2

அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகின்ற சீரியல் ஒவ்வொன்றுக்கும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய தொடர்களாக இருக்கும்.

அடடா.. இப்படி பண்ணிட்டாங்களே..

தொலைக்காட்சி ஆரம்பித்த காலம் தொட்டே சீரியல்களை அதிகளவு ஒளிபரப்பு செய்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருக்கும் சன் டிவியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும்.

அந்தவரிசையில் தற்போது பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான சுந்தரி, சிங்கப்பெண்ணே, கயல் போன்ற தொடர்கள் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும்.

சன் டிவியை விட்டு வெளியேறும் தொடர்..

இந்நிலையில் தற்போது சன் டிவியில் சில தொடர்கள் நிறைவு பெற உள்ளதாக வெளிவந்திருக்கும் விஷயங்கள் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக சன் டிவியில் முடிவுக்கு வர உள்ள தொடர்களின் வரிசையில் மிஸ்டர் மனைவி, இனியா, ம சுந்தரி போன்ற தொடர்கள் இருக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது.

malar 3

இதனை அடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மலர் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ரசிகர்கள் இந்த சீரியலை மிஸ் செய்வோம் என கமெண்ட்களை அதிகளவு செய்து வருவதை அடுத்து ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தனை தொடர்கள் முடிந்தாலும் கண்டிப்பாக இன்னும் சிலர் நல்ல தொடர்கள் ஒளிபரப்பாக வாய்ப்புகள் உள்ளது என்பதால் அவர்களது மனதை சற்று தேத்தி வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

malar 1

மேலும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மலர் தொடர் நிறைவடைவதை ஒட்டி ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை விவரம் தெரியாத அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

நீங்களும் தொடர்ந்து மலர் சீரியலை பார்ப்பவர் என்றால் இந்தத் தொடர் நிறைவு வருவதைப் பற்றி உங்கள் மனதில் என்ன ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam