சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் வைஷ்ணவி எங்கேஜ்மென்ட் ஓவர்.. வெளி வந்த வீடியோ!!

விஜய் டிவியில் தற்போது சன் டிவிக்கு போட்டியாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சீரியலில் நாயகனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வெற்றி வசந்த் அண்மையில் தனது காதலி யார் என்பதை மிக அழகான முறையில் வெளிப்படுத்தி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் வைஷ்ணவி எங்கேஜ்மென்ட் ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் படை இருப்பது போல தற்போது சிறகடிக்க ஆசை சீரியலுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக டி ஆர் பி எல் தக்க இடத்தை பிடிக்க முடியாத சீரியலில் ஒன்றாக இந்த சீரியல் உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் வைஷ்ணவி என்ற சீரியல் நடிகையை காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டிருந்தார்கள்.

இதற்கு பதிலளிக்க கூடிய வகையில் நேற்று அவர்கள் இருவரது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கிறது. இந்த நிச்சயதார்த்த விழாவில் ஜோடிகள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட அற்புதமான தருணம் அனைவரையும் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது.

இந்த நிகழ்வினை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தொடர்ந்து சொல்லி வருவதோடு நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

இருமனம் இணைந்து நடக்கின்ற திருமண நிகழ்வுக்கு அஸ்திவாரமாக எந்த நிச்சயதார்த்தம் இருப்பதாகவும் இதற்காக இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

வெளி வந்த வீடியோ..

இந்நிலையில் இவர்களது நிச்சயதார்த்த வீடியோவானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் வீடியோக்கள் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த வீடியோவில் இருவரும் பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் எதிர்பாராத சமயத்தில் இவர்கள் நிச்சயதார்த்தத்தை நடத்தி அசர வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது நிச்சயதார்த்த வீடியோவை நீங்கள் பார்த்து மகிழ்வதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழலாம்.
https://www.instagram.com/reel/DBEo9uNPf_N/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam