மிகப்பெரிய கேப்புக்குப் பின்னால் மீண்டும் நடிக்க வந்துட்டாரு… நம்ம டைரக்டர் சேரன்!

 தமிழில் சேரன் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடிக்கும் டைரக்ட் செய்திருக்கிறார். இவரின் ஆட்டோகிராப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு நீண்ட நாட்கள் ஓடி ஒரு பெரிய வசூலையும் திரையுலகத்திற்கு கொடுத்தது.

 திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்த ஆட்டோகிராஃப்பிக்கு பின் இவர் ஒரு நீண்ட கேப் எடுத்துக்கொண்டு தற்போது படத்தில் நடிக்க வந்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் தமிழ்குடிமகன் என்பதாகும்.

 இவரது படத்தில் எப்போதும் சிறந்த கதையம்சம் இருப்பதோடு குடும்ப பாங்கான கதையாகவே அதுயிருக்கும் மேலும் சமூக கலாச்சார சீரழிவுகளை முன்வைக்கக்கூடிய கருத்துக்களை கொண்டிருக்கும்.

 அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கார் வண்ணன் டைரக்ட் செய்கிறார்.லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த படமானது தயாரிக்கப்பட உள்ளது.

 சேரன் நடிக்கும் எந்த படத்தில் ஒரு தனி மனிதனின் குடியுரிமையை பற்றி மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உரிமைகள் குறித்தும் சமுதாயத்தின் நிலைப்பாடு பற்றியும் இந்தப் படம் முழுமையாக பேசும் என்று இதன் இயக்குனர் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----

  தமிழ்குடிமகன் படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் மேலும் பேசுகையில் இந்தப் படம் ஒரு வித்தியாசமான கோணத்தில் பலரையும் கவரும் வகையில் எடுக்கப்பட உள்ளது என்றார். படத்தின் கேரக்டருக்கு மிகச் சரியான தேர்வாக இயக்குனர் சேரன் மட்டுமே இருப்பார். இவருடைய நடிப்பு இந்த படத்திற்கு நேரம் பக்கபலமாக இருக்கும்.

 மேலும் சிறப்பாக இந்தப்படத்திற்கு கூறப்பட்டது என்ன என்றால் தளபதி விஜயின் அப்பா இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

 இவரோடு இணைந்து மலையாள நடிகர் லால், துருவா, ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி, ரவிமரியா, மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர் எம் கே ஆர் ஆகியோர் எந்த படத்தில் நடிக்க உள்ளார்கள்.

 எப்பொழுதுமே சேரன் படத்தில் ஒரு மெல்லிய குடும்பநிலை ஓடிவரும் அந்த குடும்பப்பாங்கான  கேரக்டர்களை மீண்டுமொருமுறை நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்ட ஒரு மிகச்சிறந்த படமாக இந்த படம் உருவாகும் என்று தெரிகிறது.

---- Advertisement ----