ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் தாமரை..! – ஹீரோ யாருன்னு பாருங்க.. தூக்கி வாரிப்போட்டுடும்..!

விஜய் டிவி நடத்தி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் சீசன் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த ஐந்தாவது சீசனில் யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத நபராக களத்தில் இறக்கப்பட்ட அவர்தான் தாமரை.தெருக்கூத்து நடிகையான இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை விஜய் டிவிக்கு  உள்ளது.

அதிக நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இவர் தாக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இவரது நடவடிக்கைகளால் பலர் முன் இவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.

பொதுவாகவே விஜய் டிவியில் அறிமுகப்படுத்தப்படும். இது போன்ற கலைஞர்கள் கண்டிப்பாக பிரபலமாகி ஒரு உச்சகட்ட அந்தஸ்தை அடைவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக நம் சிவகார்த்திகேயன் முதற்கொண்டு சூப்பர் சிங்கரில் பாடிய  சிவானி குக் வித் கோமாளி புகழ் புகழ்  போன்றரோடு திரைத்துறையில் அடி எடுத்து வைத்து மிக நல்ல முறையில் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள்.

அது போலவே நாட்டுப்புற பாடல்களை மட்டுமே போட்டியில் பாடி அசத்திய செந்தில் ராஜலட்சுமி ஜோடிகளும் தற்போது திரைப்படத்தில் பின்னணி பாடகராக வலம் வந்து மிக நல்ல பெயரை பெற்று இருக்கிறார்கள்.

 இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட தாமரைக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்து இருப்பதாக கூறுகிறார்கள். இது, அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

---- Advertisement ----

இந்த படத்தில், இயகுனரும், நடிகருமான சிங்கம் புலி-க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் தாமரை.

---- Advertisement ----