“ப்பா.. டைட்டான ஸ்லீவ் லெஸ் டாப்ஸ்..” ஆளை மயக்கும் தாமிரபரணி பானு-வின் நச் க்ளிக்ஸ்..!

கருப்பான கையாலே.. என்ன புடிச்சான்.. காதல்..என் காதல்.. பூ.. பூக்குதம்மா என்று நடிகர் விஷாலுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டவர் நடிகை தாமிரபரணி பானு. இவருடைய உண்மையான பெயர் முக்தா பானு என்பதாகும்.

கடந்த 2005ஆம் ஆண்டு மலையாள திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதன்பிறகு தெலுங்கு படத்தில் நடித்தார் கடைசியாக கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஷால் ஹீரோவாக நடித்த தாமிரபரணி படத்தில் பானுமதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திரைப்படம் தான் இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. குடும்ப பாங்கான கதை மட்டும்தான் நடிப்பேன் என்று ஏகத்துக்கும் வசனம் பேசி தன்னுடைய சினிமா வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டார் நடிகை தாமிரபரணி பானு.

ஆனால் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஒரு சினிமா நடிகையாக நான் கூறியது தவறு என்பதை புரிந்து கொண்டேன் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார். இப்பொழுது காட்டும் கவர்ச்சியை தன்னுடைய இளம் வயதிலேயே காட்டியிருந்தால் நடிகை நயன்தாராவுக்கு டஃப் கொடுத்திருக்கலாம் என்ற நிலை இருந்தது.

காரணம் தன்னுடைய முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை பானு தொடர்ந்து ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை, சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகை தாமிரபரணி பானு தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் போட்டியாளராக, சிறப்பு விருந்தினராக என பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய பங்கை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது…? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.