“தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்..!” – ஒரு அலசல்..!

தமிழர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தஞ்சையில் அமைந்திருக்கும் பெரிய கோயில் விளங்குகிறது. சோழர்களின் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இன்று வரை நிமிர்ந்து நிற்கும் இந்தக் கோயிலில் எண்ணற்ற அதிசயங்கள் உள்ளது.

அதிசயங்கள் மட்டுமல்ல இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசமாகவும் இந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இந்தக் கோவிலில் இருக்கும் பாதாள வழியில் ரகசிய அறை உள்ளதாகவும் அது பற்றிய விஷயங்கள் இன்றுவரை வெளிவராமல் ரகசியமாகவே உள்ளது.

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அவர் பெயராலேயே ராஜராஜேஸ்வரர் கோயில் என்ற பெயர் இருந்ததாம்.

இது பின்னர் மராட்டியர்களின் ஆதிக்கத்தின் காரணமாக தஞ்சை பெரிய கோயில் என்று மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் உச்சகட்ட சிறப்பு என்ன என்றால் சூரியன் எவ்வளவு உச்சியில் இருந்து கொளுத்தினாலும் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது.

மேலும் இந்த கோபுரத்தின் மேல் இருக்கக்கூடிய கூரைகள் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லால் செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கல்லை அன்று எப்படி அதன் உச்சிக்கு எடுத்துச் சென்று வைத்தார்கள் என்பது இன்றுவரை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ராஜ ராஜ சோழன் வைத்த நன்றிகளை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதாக கூறுகிறார்கள். இந்த சிலை வளர்ந்து கொண்டே சென்றது மராட்டியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தால் அந்த சிலையை எடுத்து வேறொரு சிலையை கோயில் பிரகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

1,30,000 தன் கிரானைட் கற்களைப் பயன்படுத்திதான் தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை கட்டியவர்கள் மற்றும் உதவியாளர்களாக இருந்தவர்கள் என அனைவரது பெயரும் கோயில் கல்வெட்டில் உள்ளது.

இத்துணை சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயங்களில் இடம்பெறாதது தமிழர்களின் மனதில் சற்று துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கோயிலில் தமிழர்களின் கட்டிடக்கலை அற்புதமாக வெளிப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் வரலாற்றை எடுத்து காட்டக்கூடிய அற்புதமான சான்றாக இது திகழ்கிறது.