“அவரை கட்டி புடிச்சு.. இச்சு குடுங்க…” – தெறித்து ஓடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வருபவர் தீபிகா. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான தீபிகா, சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டும் இருக்கிறார். அந்த வகையில், சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற அவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து, பகிர்ந்திருக்கிறார். அது இப்போது, சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

பெண்கள், தாங்கள் பணிசெய்யும் இடங்களில், ‘அட்ஜஸ்மென்ட்’ எனப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலான பெண்கள், தங்களது குடும்ப சூழல் கருதியோ, வேறு வழியின்றியோ தங்களுக்கு நேரும் செ*ஸ் டார்ச்சர் குறித்து, வெளியே சொல்வதில்லை. ஆனால், ‘மீ டூ’ என்பது டிரெண்ட் ஆன பிறகு, பெண்கள் பலருமே இதுபற்றி வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

சமீபத்தில், நடிகை குஷ்பு தனது எட்டு வயதில், தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி இருந்தார். அதுபோல், கேரளாவை சேர்ந்த ஒரு பெண் கலெக்டரும் இதுபற்றி தெரிவித்திருந்தார்.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு துறை சார்ந்த பெண்கள், சினிமா நடிகைகள், அரசியலில் உள்ள பெண்கள், ஊடகத்துறை பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் என பலதரப்பட்ட இடங்களிலும் பெண்களுக்கு இந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் என்பது இருக்கவே செய்கிறது.

இதனால்தான் பெண் குழந்தைகளிடம் இதுபோன்ற அத்துமீறல்கள் ஈடுபடும் ஆண்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இப்போது, சீரியல் நடிகை தீபிகா கூறி இருப்பதும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் சம்பவம்தான்.

---- Advertisement ----

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தில், அவரது தங்கையாக நடிக்க ஆடிஷன் நடந்திருக்கிறது. அதற்காக தீபிகா சென்றிருக்கிறார். அப்போது, தனியறையில் இவரிடம் அங்கிருந்த நபர், முத்தம் தருமாறு கூறி இருக்கிறார்.

இந்த படத்தில் வரும் தங்கை கேரக்டர், முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனால், அவரை கட்டிப்பிடித்து முத்தம் தருவது போல, என்னிடம் நடித்துக்காட்ட வேணடும் என்றும் அந்த நபர் கூற, அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தேவையே இல்லை என்று தீபிகா பதில் கூறிவிட்டு, வந்திருக்கிறார்.

இதுவரை வந்த எட்டு பேர் எனக்கு முத்தம் கொடுத்து விட்டுதான் சென்றனர். நீ மட்டும் ஏன் தர மறுக்கிறாய்? எனவும் தீபிகாவிடம் கேட்டிருக்கிறார் அந்த நபர்.

தீபிகாவின் இந்த பதிவு இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதுபோன்ற பாலியல் அத்துமீறல், சகித்துக்கொண்டு துன்புறுத்தல்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டன குரல்கள், சமூக வலைதளங்களில் ஒலித்து வருகின்றன.

---- Advertisement ----