Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பருக்களாக இருந்த என் என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

நடுன போட்டியாளராக மீடியா உலகில் நுழைந்து அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் லெவலுக்கு தென்னிந்திய சினிமாவில் உயர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சாய் பல்லவி.

பார்ப்பதற்கு மிகவும் நேச்சுரலான முகம் எதார்த்தமான பேச்சு ஹீரோயின் என்ற பந்தா இல்லாத attitude இது எல்லாமே வெகுஜன மக்களையும், வாலிப வட்டத்தை வாலிப வட்டத்தையும் வெகுவாக கவர்ந்தது.

நடனத்தில் ஆர்வம் கொண்ட சாய்பல்லவி:

படிக்கும்போது நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தால் நடன போட்டிகளில் கலந்துகொண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் கூட சாய் பல்லவி தென்பட்டு வந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

--Advertisement--

அப்போது நடனமாடிய வீடியோக்கள் கூட தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சாய் பல்லவியா? இது என வியக்க வைக்கும் அளவுக்கு தனது சிறு வயதில் இருந்து நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த சாய் பல்லவிக்கு தாம் தூம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சில விளம்பர படங்களிலும் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

இதனிடையே பள்ளி படிப்பு முடித்துவிட்டு மருத்துவ பட்டப்படிப்பு பயின்ற சாய்பல்லவிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெற்றி மகுடம் சூட்டிய முதல் திரைப்படம்:

முதல் படத்திலிருந்து மாபெரும் வெற்றி நாயகியாக பார்க்கப்பட்டார். அவரது நடிப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது என்றே சொல்லலாம்

மலர் டீச்சர் ஆக அப்படத்தில் நடித்து ரசிகர்களின் யோகோபித்த வரவேற்பு பெட்ரா சாய்பல்லவிக்கு தொடர்ந்து பழமொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழில் கரு என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக நடிக்க தொடங்கி தொடர்ந்து கனம், மாரி 2,என் ஜி கே , கார்க்கி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே தெலுங்கிலும் பல்வேறு ஹிட் படங்களில் நடித்த வந்தார். தொடர்ந்து மிக குறுகிய காலகட்டத்திலேயே அடுத்த அடுத்த வெற்றி படங்களில் நடித்த தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பருக்கள் நிறைந்த முகத்தோடு நடித்த பல்லவி:

நடிகை சாய் பல்லவி பருக்கள் நிறைந்த முகத்தோடு எந்த ஒரு மேக்கப்பும் செய்யாமல் அலங்காரம் செய்யாமல் மிகவும் சிம்பிளாக எதார்த்தமாக பக்கத்து வீட்டு பெண் போலவே படத்தில் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு சாய் பல்லவியின் பருக்கள் மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் அவருக்கு ஏற்பட்ட பருக்கள் பற்றியும் பின்னர் அது காணாமல் போனதன் ரகசியம் பற்றியும் என்ன மாதிரியான டிப்ஸ் ஃபாலோ பண்றீங்க என்பது பற்றியும் கேள்வி கேட்டதற்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கூறி அசர வைத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இப்படிதான் என் முகம் பாலிஷ் ஆச்சு:

அவர் கூறியதாவது, சினிமாவில் அறிமுகமான புதிதில் என் முகத்தில் நிறைய பருக்கள் இருந்தது.

ஆனால் தற்பொழுது அந்த பருக்கள் எதுவுக்கே இல்லை. இதற்காக நான் ஏதேனும் சிகிச்சை எடுத்துக் கொண்டேனா இதனுடைய ரகசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள்.

அதனுடைய ரகசியத்தை தற்போது நான் சொல்கிறேன். நான் எதுவுமே செய்யவில்லை. அதுதான் ரகசியம்.

வயசு பெண்கள் இளம் ஆண்கள் மத்தியில் இந்த முகப்பரு வருவது என்பது சாதாரணமான விஷயம்.

இதற்காக நாம் பயப்பட தேவையில்லை. எதற்காக தனியாக சிகிச்சை எடுக்க வேண்டும்? அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

அதுவாக வரும் அதுவாக போய்விடும். நான் என்னுடைய முகப்பருக்களை போக்க வேண்டும் என்று எந்த சிகிச்சையோ அல்லது எந்த ஒரு தெரபியோ பயன்படுத்தவில்லை.

அதுதான் என்னுடைய முகம் பாலிஷ் ஆனதற்கு காரணம் என கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top