Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புது பங்களா வாங்க காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட நடிகர்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி.

இவர்கள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகப் பிரம்மாண்டமாக இந்த திருமணம் அப்போதே நடைபெற்றது.

பல நட்சத்திர பிரபலன்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்து இருந்தார்கள். தனுஷ் திருமணம் செய்யும்போது அவ்வளவு பெரிய நட்சத்திர ஹீரோவெல்லாம் கிடையாது.

தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி:

அவர் மிகவும் எளிமையாக வளர்ந்து வந்த ஹீரோதான். ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார்.

அப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் தன்னுடைய மகளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார்.

---- Advertisement ----

அவர் நினைத்திருந்தால் நட்சத்திர நடிகர்களை கூட்டிட்டு வந்து மருமகன் ஆக்கி இருக்கலாம் என அப்போதைய பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், ரஜினிக்கு ஏதோ ஒன்று தனுஷ் மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருந்துள்ளது. இவர் பின்னாளில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் ஆவார் என்ற ஒரு நம்பிக்கையில் தான் தனது மகளுக்கு மனம் முடித்து வைத்தார்.

கிடுகிடுவென வளர்ந்த தனுஷ்:

ரஜினி நினைத்தது போன்றே தனுஷும் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோவாக வலம் வாங்கினார்.

குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மெரிசலாகினார்.

அது மட்டும் இல்லாமல் தனுஷின் வளர்ச்சியில் ரஜினிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம்.

தனுஷ் கமிட் ஆகும் படம் எல்லாம் எந்த ஒரு சிக்கலும் இல்லாத வகையில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக அமைவதற்கு ரஜினி என்ற பிராண்ட் மிகப்பெரிய காரணமாக இருந்து வந்தது.

அந்த வகையில் ரஜினியின் மூலம் வளர்ச்சி அடைந்த தனுஷ் பின்னாலில் ரஜினிக்கு நன்றி உணர்வோடு இருக்கவில்லை .

நன்றி இல்லாதவர் தனுஷ்;

ஆம் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவான தனது மனைவியை தனுஷ் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்துள்ளார்.

கடந்து சில வருடங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியே தான் வாழ்ந்து வருகிறார்கள் தனித்தனியே பிறந்து வாழ்ந்து வந்த இவர்கள் அண்மையில் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து வேண்டும் என மனுதாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த விஷயம் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அம்மா வீட்டில் தங்கி தனது பிள்ளைகளை பார்த்துக் கொண்டு வந்தார்.

அந்த சமயத்தில் ரஜினியை வைத்து லால் சலாம் படத்தையும் இயக்கி தன்னுடைய கெரியரில் பிஸியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மனைவியுடன் விவாகரத்து:

இந்த நிலையில் தனுஷை பிரிய விவாகரத்து கேட்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென புதிய பங்களா வீட்டை ஒன்றை வாங்கி அதில் குடி பெயர்ந்திருக்கிறார்.

காரணம் தனது பெற்றோருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு வாழ விருப்பம் இல்லையாம். தனது மகன்களுடன் சுதந்திரமாக, தனது சொந்த காலில் நிற்க முயற்சி எடுத்து இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய பெயரில் வாங்கிய அனைத்து சொத்துக்கள் மற்றும் வீட்டை எல்லாவற்றையுமே அவரே வைத்துக் கொள்ளட்டும் என தனுஷ் மிகவும் பெருந்தன்மையோடு கூறி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் நினைவுபடுத்திருக்கிறார்.

பங்களா வீட்டை வாங்க காரணம்:

எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெற்றோர்களுடன் வாழ விருப்பம் இல்லாமல் தான் இந்த பங்களா வீட்டை வாங்கி இருக்கிறார்.

இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அண்மையில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக இல்லாமல் தனது தாய் தந்தை மற்றும் சகோதரி சௌந்தர்யா இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மிகவும் சிம்பிளியாக கிரக கிரகப்பிரவேசத்தை நடத்தி குடி பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவியது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top