“இதனால் தான் கணவரை விவாகரத்து செய்தேன்..” – “துணிவு” ஹீரோயின் மஞ்சு வாரியர் அதிர்ச்சி தகவல்..!

மஞ்சு வாரியர்,(Manju Warrier) மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர். சமீபத்தில், அஜித்குமார் நடித்த துணிவு படத்தில், மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிட்டார்.

இவரது சொந்த ஊர் கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள புல்லு என்ற கிராமம். ஆனால், கடந்த 1978ம் ஆண்டில், மஞ்சு வாரியார் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும்.

முதலில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், மோகரவம் என்ற தொடரில், மஞ்சு வாரியார் நடித்து, மக்கள் மத்தியில் அறிமுகத்தை பெற்றார். அதன் பிறகு விளம்பர படங்கள் பலவற்றில் நடித்தார். அதைத் தொடர்ந்து, மலையாள சினிமாவில் தன் காலடியை பதித்தார்.

மஞ்சு வாரியார்
Manju Warrier

தனது 17வயது வயதில் சாட்சியம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார் மஞ்சு வாரியார். அதைத் தொடர்ந்து சல்லாபம், ஈ புழையும் கடந்து, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ண குடியில் ஒரு பிரணயகாலத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து, மலையாள சினிமா உலக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மஞ்சு வாரியார் தேசிய விருது மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை பெற்றிருக்கிறார். இந்நிலையில், மலையாள நடிகர்களின் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகர் திலீப்பை, மஞ்சு வாரியர் திருமணம் செய்துகொண்டார்.

மஞ்சு வாரியார்
Manju Warrier

இந்த தம்பதிக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டில், திலீப் – மஞ்சுவாரியார் பிரிந்தனர். இருவருக்கும் விவகாரத்து பெற்றுக்கொண்டனர்.சினிமா நடிகர், நடிகையர் வாழ்க்கையில், இது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே மாறிக்கொண்டு இருக்கிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என, எந்த மொழி சார்ந்த நடிகர், நடிகையாராக இருந்தாலும் சில படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். அதில் ஏற்படுகிற அறிமுகம், பழக்கம், நட்பு, நாளடைவில் காதலாகி திருமணம் செய்துகொள்கின்றனர். அதற்கு பின், சில ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகின்றனர். விவாகரத்து பெற்று விடுகின்றனர்.

மஞ்சு வாரியார்
Manju Warrier

தனுஷ் – ஐஸ்வர்யா, செல்வராகவன் – சோனியா அகர்வால், பிரசாந்த் – கிரக லட்சுமி, சீதா – பார்த்திபன், ராதிகா – பிரதாப் போத்தன், இயக்குநர் விஜய் – அமலா பால், கமல் – சரிகா, நாக சைதன்யா – சமந்தா, சரிதா – முகேஷ், சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி – தினேஷ் என பல ஜோடிகளை சொல்ல முடியும்.

பெரும்பாலும் இவர்களது பிரிவுக்கு பின்னணி காரணமாக இருப்பது திருமணத்துக்கு பிறகு வேறு ஒரு நடிகர், அல்லது வேறு ஒரு நடிகையோடு மீண்டும் இவர்கள் தொடர்பில் இருப்பதுதான்.

மஞ்சு வாரியார்
Manju Warrier

அந்த வகையில், மஞ்சுவாரியார் – திலீப் பிரிவுக்கு காரணமும் இப்போது உறுதியாக தெரிய வந்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டில், திலீப்பை நான் விவகாரத்து செய்தேன். அவருக்கும், நடிகை காவ்யா (காவ்யா மாதவன்) வுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்து வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பே, இது எனக்கு தெரிய வந்ததால், எங்களது திருமண வாழ்வில் உரசலும், அதைத்தொடர்ந்து விரிசலும் ஏற்பட்டது. எனவே, அவரை முழுமையாக பிரிந்துவிடுவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்.

மஞ்சு வாரியார்
Manju Warrier

விவகாரத்துக்கு பிறகு, அவருடன் எந்த வழியிலும் தொடர்பும், நட்பும், பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்,’ என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.காசி படத்தில், கண்பார்வையற்ற சியான் விக்ரமுக்கு தங்கயைாக நடித்தவர்தான் நடிகை காவ்யா மாதவன். அவருடன் திலீப் கொண்ட பழக்கமே, தனது விவாகரத்துக்கு காரணம் என்கிறார் மஞ்சுவாரியார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.