விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நடக்காமல் இருக்க காரணம் இது தான்..!

விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை

சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்களும் முக்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறும் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில்,

விஜயகாந்தின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு, சீரியஸ் கண்டிஷனில் இருந்ததால் அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

--Advertisement--

நிச்சயதார்த்ததோடு நின்றுபோன திருமணம்:

இதன் காரணமாக மகன் விஜய பிரபாகரன் திருமணம் தள்ளி போனது. மேலும் விஜயகாந்த் தனது மகனின் திருமணம் பிரதமர் மோடியின் முன்னிலையில் நடக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார்.

ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் அவரது மகனின் திருமணம் தள்ளி போய் கடைசி வரை அது ஆகாமல் முடிந்து விட்டது.

இதனால் விஜயகாந்த் மரணிக்கும் போது தனது இரு மகன்களுக்கும் திருமணம் செய்யவில்லையே என்ற மிகப்பெரிய வேதனை அவரது மனதுக்குள் இருந்ததாக குடும்ப வட்டாரம் கூறுகிறது.

திரைப்பட நடிகரும் சிறந்த அரசியல்வாதியுமான விஜயகாந்த் எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் தனது திறமையாலும் முயற்சியாலும் திரைத்துறைக்கு அறிமுகமாகினார்.

நடிகராக விஜயகாந்த்:

முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு அவர் அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர் உள்ளிட்ட வானத்தைப்போல உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்து மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் பல்வேறு விருதுகளையும் பிலிம் பேர் விருதுகளையும் தமிழக திரைப்பட அரசு விருதுகளையும் கலிமாமணி விருதுகளையும்,

சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதையும் பெற்றிருக்கிறார். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமாக இருந்து வருகிறார்.

1990 ஆம் ஆண்டு பிரமலதா என்னும் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயகாந்த்திற்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.

உயிரை பறித்த கொரோனாதொற்று:

முன்னதாக விஜயகாந்திற்க்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் அதற்காக வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட நான்கு நாட்கள் மருத்துவமனையில் உடல் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தின் டிசம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலமானார்.

அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவரது ரசிகர்களையும் அரசியல் வட்டாரத்தையும் நிலைகுலைய செய்தது.

கோடிக்கணக்கான மக்கள் அவரது இறுதி அஞ்சலியில் வந்து தேர் போல வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தி வழி அனுப்பி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.