Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

உடலுறவில் இது மிக முக்கியமானது.. கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்த ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகியும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஹாலிவுட் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார்.

இவருக்கு கிட்டத்தட்ட 50 வயதாகியும் இன்னும் அழகு குறையாமல் அதே பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

50 வயதிலும் பொலிவுடன் ஐஸ்வர்யா ராய்:

அவர்களுக்கு கிட்டத்தட்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இவர் முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

---- Advertisement ----

இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் உலக அழகியாக பெறுவாரியான ரசிகர்களாலும் இந்திய மக்களாலும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு பச்சன் வீட்டு மருமகளாகினார் .

இதற்கு முன்பு இவர் சல்மான் கானை காதலித்து அவர் கொடுத்த காதல் டார்ச்சரால் அவருடன் இருக்க முடியாமல் அவரை பிரேக்கப் செய்துவிட்டு பிரிந்து விட்டார்.

பின்னர் விவேக் ஓபராய் உடன் சில ஆண்டுகள் காதலில் இருந்து வந்தார். கர்நாடக மாநிலம் மங்களூரை சொந்த ஊராகக் கொண்ட ஐஸ்வர்யா ராய் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய்:

இவருக்கு ஆதித்யா பச்சன் என்ற ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ஜோதா அக்பர், ராவணன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இதன் மூலம் கோலிவுட்டிலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய்,

ஆண் பெண் உறவு குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறியதாவது காதலன் காதலி கணவன் மனைவி தோழன் தோழி இப்படி ஆண் பெண் உறவில் சில நேரம் ஒரு விதமான சலிப்பு ஏற்படலாம் சோர்வு ஏற்படலாம்.

உடலுறவில் அது ரொம்ப முக்கியம்:

குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரை ஒருவர் வெறுக்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். இது எல்லா வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.

ஆனால், உடலுறவு என்று வரும்பொழுது அங்கு இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இருவருமே மன அளவில் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

உடலோடு உடல் இணைகிறது என்ற எண்ணத்துடன் மட்டும் இருக்கக் கூடாது. அது இரு உயிர்களின் கலப்பு இரு மனங்களின் சங்கமம்.

இருவருடைய காதலின் வெளிப்பாடு என்பதாக இருக்க வேண்டும். வெறும் உடல் தேவைக்காக மட்டும் உறவு கொள்வது என்பது உடலுறவே கிடையாது என பேசி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top