Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

60 வயசாகியும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை கோவை சரளா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஆட்சி மனோரமாவுக்கு பிறகு அடுத்த காமெடி நடிகையாக ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தவர் தான் கோவை சரளா.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டவர்களுடன் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து காமெடி காட்சிகளில் கலக்கியவர் கோவை சரளா.

சினிமாவை கலக்கிய கோவை சரளா:

குறிப்பாக இவரது காமெடி பேச்சும் எதார்த்தமான நடிப்பும் காமெடியான கலகலப்பான இவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்தது.

வடிவேலுக்கு ஜோடியாக கோவை சரளா நடிக்கும் திரைப்படம் என்றாலே அது மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விடும்.

--Advertisement--

வடிவேல் நல்ல பாடும் திறமையும் கொண்டு மிகவும் ஒல்லியாக இருப்பார். பாடி லாங்குவேஜ் சிறப்பான நடிப்பு கலகலப்பான காமெடி இப்படி பல விஷயங்களில் கோவை சரளாவோடு அவர் ஒத்து போனதால் அவர்களது ஜோடி சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் விரும்பி பார்த்தனர்.

ஆனால் செந்தில் கவுண்டமணி இவர்கள் எல்லாம் கோவை சரளாவை வடிவேலுவுக்கு ஜோடியாக சேர்ந்து நடிக்கவே விடவில்லையாம் பயமுறுத்தினார்களாம்

காரணம் நீ அவருடன் சேர்ந்து நடித்தால் உன்னுடைய சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் அத்தோடு முடிந்து விடும் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

வடிவேலுவுடன் நடிக்க விடாத கவுண்டமணி:

அதையும் மீறி கோவை சரளா வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் எதிர்ப்புகளும் வந்திருக்கிறது .

ஆனால் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்து அந்த ஜோடி பிரமாதமான ஜோடியாக பிரபலம் ஆனார்கள்.

அதன் பின்னர் கோவை சரளா யாருடைய பேச்சையும் நம்பாமல் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னாலே தாராளமாக ஓகே சொல்லி விடுவாராம்.

முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தான் கோவை சரளாவின் அறிமுகம் இருந்தது.

முதல் படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டது அவரது நடிப்பு அவ்வளவு பிரம்மாதமாக இருப்பதாக பலரும் பாராட்டி தள்ளினார்கள்.

தொடர்ந்து வைதேகி காத்திருந்தால், உயர்ந்த உள்ளம், சின்ன வீடு, லட்சுமி வந்தாச்சு, ஜப்பானில் கல்யாணராமன், கரகாட்டக்காரன், அதிசய மனிதன், என் காதல் கண்மணி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

கிட்டதட்ட இதுவரை 800 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவருக்கு அடுத்தது யார் என்ற கேள்வி எழுப்பும் வகையில் கோவை சரளா தற்போது வரை தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான விருதுகள்:

இது தவிர இதற்கு பல்வேறு விருதுகளும் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

கோயம்புத்தூர் சொந்த ஊராகக் கொண்ட கோவை சரளா இன்று வரை கிட்டத்தட்ட 62 வயதாகியும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார்.

இத்தனை வயதாகியும் ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை? நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தீர்கள் பல கோடி சொத்து வைத்திருக்கிறீர்கள்.

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தீர்கள். நீங்கள் நினைத்தால் என்ன வேணாலும் செய்திருக்கலாமே என கேட்டதற்கு கோவை சரளாவின் பதில் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது. நாம் பிறக்கும்போது தனியா தான் பிறக்கிறோம். இறக்கும் போதும் தனியாக தான் இறக்கப் போகிறோம்.

இடையில் எந்த உறவுகளும் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவே விரும்பவில்லை.

திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாக வாழ்க்கையில் விடப்பட்டு விடுகிறார்கள்.

இதனால் தான் திருமணமே செய்யல:

எனவே எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பமே இல்லை. அதனால் எனக்கு திருமணத்தின் மீது ஈடுபாடே இல்லை.

அதுமட்டுமில்லாமல் எனக்கு நிறைய சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளே எனக்கு போதும்.

குடும்பத்தை சிறப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய எண்ணம் எனக் கூறியிருக்கிறார்.

கோவை சரளாவின் இந்த எண்ணமும் அவரது பதிலும் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடிகை கோவை சரளா சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 பேய் படத்தில் காமெடி நடிகையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top