பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை? காரணம் என்ன? என்று அலசும் போலீசார்!விடை கிடைக்குமா?

தில் படத்தில் உன் சமையலறையில் உப்பா… சக்கரையா… என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் இதயங்களில் குடி புகுந்த  எழுத்தாளர் மற்றும் பாடல் ஆசிரியரான மகள் சென்னை அரும்பாக்கத்தில் ஏ.டி.எம் காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில் பாடல் ஆசிரியர் மற்றும் எழுத்தாளரின் மகளான தூரிகை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இவர்  தனது தந்தை கபிலனை போலவே எழுத்தாளராக  ஆங்கில ஊடகத்தில் பணி புரிந்து பல கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.மேலும் இவர் சிறந்தகாஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தவர். தற்கொலைக்கு  பின்னர் இவரது உடலானது சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

 தற்போது பல வகைகளில் தற்கொலை பெருகி வந்து உள்ளது. இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்ன? அவர்கள் மனநிலை அந்த சமயத்தில் எப்படி இருக்கும்? அதை தடுப்பதற்கு வழியே இல்லையா? என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் தற்கொலையின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்களிலும் அதிக அளவு தான் காணப்படுகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரன், என வயது வித்தியாசம் பாராமல் இந்த சம்பவம் ஒவ்வொரு இடத்திலும் நடந்த வண்ணம் தான் உள்ளது. இவர்களுக்கு உதவ எண் 104 உள்ளது.

தூரிகை குடும்ப பிரச்சனை காரணமாகத்தான்  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுப்படுகிற நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 இந்த சமயத்தில் கபிலனின் குடும்பத்தார் தனது மகளை இழந்த சோகத்தில் மிகவும் கவலையோடு காணப் படுகிறார்கள் அவர்களுக்கு திரைத்துறையை சான்றோரும் எழுத்துத் துறையை சார்ந்தோரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

---- Advertisement ----

மேலும் இதற்காக போலீஸ் வழக்கினை பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள் இளம் பெண்ணான தூரிகையின் இந்த தற்கொலை திரையுலகில் மட்டுமல்ல மற்றோரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது

---- Advertisement ----