மித்ரன் வசனத்தில் அதர்வா நடித்துள்ள டிரிக்கர் திரைப்படம் திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 23 அன்று ரீலிஸ்!

தமிழில் குணச்சித்திர நடிகராக திகழ்ந்த  முரளியின் மகன் அதர்வா. இவர்  இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வந்த போதிலும்  ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை தந்தது.

அடுத்து தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் தான் டிரிக்கர். இப்படத்தில் இவர் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பது  அனைவருக்கும் தெரியும்.

இந்தப்படத்தில் அருண்பாண்டியன், சீதா, முனிஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக  தான்யா ரவிச்சந்திரன் அவர்கள் நடித்துள்ளார்கள்.

 இந்த படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து துணை நடிகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை வெளியிட்டு இருப்பார்கள் என்பது அவர்களின் பெயரை பார்க்கும் போதே தெரிகிறது. அதோடு இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்துக்கான இசையை ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவரக்கூடிய பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் அதர்வாவுக்கு இந்தப் படம் மிகப் பெரிய கம்பாக்ட் படமாக அமையும் என தெரிகிறது. ஏனென்றால் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது . படத்தின் பெயரே ஒரு வித்தியாசமாக காணப்படுகிறது. இந்த படத்திற்கான வசனத்தை மித்திரன் எழுதியிருக்கிறார். அனல் பறக்கக்கூடிய வசனங்களை அதர்வாவும் பேசி அசத்தி இருக்கிறார்.

 அப்போதுதான் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதர்வாவின் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக காணப்படுகிறார்கள். இவரின் வித்தியாசமான கெட்டப் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட தருவாயில் இந்த படமானது வரும் செப்டம்பர் 23ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

ட்ரிக்கர் படம்  திரையரங்குகளுக்கு வெளிவரும் தேதி தெரிந்த உடனே அதர்வாவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். மிகவும் ஆர்வமாக இந்த படத்தை பார்ப்பதற்கு காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …