“வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!

வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ்: ஆசை, ஆசையாய் கட்டிய வீட்டை அலங்காரம் செய்து பார்ப்பதில் அவ்வளவு இன்பம் நமக்கு கிடைக்கும். உங்கள் வீட்டை நீங்கள் எளிய முறையில் அழகாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி நாம் இனி பார்க்கலாம்.

வீட்டை பராமரிப்பது என்பது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வீட்டில் புது புது பொருட்களை வைத்து அலங்காரம் செய்வது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் உங்கள் வீட்டை அழகாக மாற்றுவது தான் புத்திசாலித்தனம்.

keep house as beauty

 எனவே உங்கள் பட்ஜெட்டிற்கு நீங்கள் முதலில் திட்டமிட்டு அதன் பிறகு உங்கள் வீட்டை அழகு படுத்த முயற்சி செய்யுங்கள்.

முதலில் உங்கள் வீட்டில் தேவையற்று இருக்கும் பொருட்களை எல்லாம் நீங்கள் நீக்கி விட்டால் அந்த இடம் மிகப்பெரிய இடம் போல் காட்சி அளிக்கும்.

மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் போட்டிருக்கும் பர்னிச்சர்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்யும்போது பார்ப்பதற்கு பளிச்சென்ற லுகில் புதிதாக காட்சி தரும்.

---- Advertisement ----

சுவர்களில் அலங்கார விளக்குகளை பொருத்துவதின் மூலம் ரூமின் அழகு மேலும் அழகு ஆவதோடு மட்டுமல்லாமல் அந்த விளக்குகளை போடுவதால் பளிச்சென்று உங்கள் வீடு இருக்கும்.

keep house as beauty

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டின் சுவற்றில் எங்காவது விரிசல்கள் ஏற்பட்டால் உடனே அதை சரி செய்து அந்த இடத்தில் வண்ண ப் போட்டோக்களை வைத்து மறைத்து விடுவதின் மூலம் கூடுதலாக உங்கள் சுவர் அழகாக பளிச்சிடும்.

கண்ணாடி பிரேமுகளில் நீங்கள் உங்கள் போட்டோக்களை வைத்திருந்தால் அந்த கண்ணாடி பிரேம்களை கூடுதல் அழகாக மாற்ற பிரேம்களுக்கு வண்ண வண்ண பெயிண்டுகளை நீங்கள் அடிக்கலாம்.

வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய இன்டோர் பிளான்டுகளை வளர்ப்பதின் மூலம் வீட்டுக்குள் ரம்யமான சூழ்நிலை உருவாகும் மேலும் சுத்தமான காற்றும், நேர்மறையான ஆற்றலும் அதிகரிக்கும்.

keep house as beauty

கதவுகளில் இருக்கும் கைப்பிடிகள் அழுகாட்டி உங்கள் வீட்டு நிலையை அசிங்கமாக காட்டும். எனவே அவற்றுக்கு நீங்கள் நிக்கல் வண்ணம் பூசுவதின் மூலம் பார்ப்பதற்கு புதிது போல் காட்சி தரும். நிக்கல் வண்ணம் பூச முடியாதவர்கள் கருப்பு நிற பெயிண்டை அடித்து விட்டால் போதுமானது.

மேலும் அடிக்கடி தரை விரிப்புகளை சுத்தமாக துவைத்து போடுவதின் மூலம் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும். எனவே இந்த குறிப்புக்களை நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் இல்லமும் அழகாக மாறிவிடும்.

---- Advertisement ----