“கணவன் மனைவி உறவை மேம்படுத்த வேண்டுமா..!”- அப்ப இந்த டிப்ஸ் போதும்..!

இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில் திருமணம் எவ்வளவு வேகமாக நடத்த முடித்து விடுகிறதோ அதை விட வேகமாக விவாகரத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுக்காமல் செல்லக்கூடிய தன்மையும் ஈகோவும் தான் என்பது அனைவருக்குமே நன்றாக தெரிந்திருந்தாலும் இவர்கள் மனதில் ஏற்படும் விரிசல்கள் காரணமாக விவாகரத்துக்கள் அதிகம் ஆகிவிட்டது.

 எனவே விவாகரத்தை தவிர்த்து கணவன் மனைவி உறவு மேம்பட என்னென்ன வழிகள் உள்ளதோ அந்த வழிகளில் நீங்கள் செயல்பட்டால் கட்டாயம் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள். எனவே இந்த கட்டுரையில் கணவன் மனைவி உறவு மேம்பட என்னென்ன வழிகள் உள்ளது. அதை எப்படி நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கணவன் மனைவி உறவு மேம்பட டிப்ஸ்

கணவன் மனைவி உறவை அதிகரிக்க நீங்கள் அடிக்கடி உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இல்லறத்தின் ஆணிவேரே அன்புதான் அந்த அன்பு உங்கள் மேல் அதிக அளவு உள்ளது என்று கணவனும் மனைவியும் மாறி மாறி உங்களின் அன்பை வெளிப்படுத்தும் போது உங்கள் உறவு மேலும் பலப்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் மனைவியிடமோ அல்லது கணவரிடமோ ஐ லவ் யூ சொல்வதை மறக்க வேண்டாம்.

மனிதனாய் பிறந்தவர்கள் அனைவருக்குமே குறைகள் இருப்பது இயல்புதான். அந்த குறைகளை என்ன என்று கண்டறிந்து அதை நாசுக்காக நீங்கள் மாற்ற முயல வேண்டும்.

 அதேபோல் உங்கள் கணவனிடம் குறை இருந்தாலும் அல்லது மனைவியிடம் குறை இருந்தாலும் அவற்றை பேசி நீங்கள் அதை சரி செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதைவிடுத்து ஒருவரை மேல் ஒருவர் குற்றம் சாட்டி உங்களுக்குள் சண்டைகள் போட்டு அது ஒரு பெரிய விரிசலை உங்களிடையே ஏற்படுத்த இடம் கொடுக்காதீர்கள்.

---- Advertisement ----

குடும்பம் மட்டுமல்லாமல் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை இருவரும் ஒன்று சேர்ந்து எடுப்பதுதான் மிகவும் நல்லது. உங்கள் உறவு மேலும் உறுதியாக இது உதவி செய்யும். எந்த ஒரு விஷயத்துக்காகவும் உங்கள் கணவரிடமும் அல்லது மனைவியிடமோ நீங்கள் ஆலோசனை செய்யவும்.இதில் போட்டி பொறாமை மனப்பான்மை உங்களுடைய ஏற்படாமல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

கிடைக்கும் காலத்தில் மனம் விட்டு பேசுங்கள். மனம் விட்டு பேசுவதின் மூலம் எல்லாம் சரியாகும். நீ யாரோ நான் யாரோ என்ற ரீதியில் நீங்கள் ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பார்க்காமல் பேசாமல் இருந்து நாட்களை கடத்த கூடாது. வேலை என்று வேலையில் மனத்தை செலுத்தகூடிய நீங்கள் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளையாவது உங்களுக்கு என ஒதுக்கி வாழ வேண்டும்.

இரு இல்ல உறவுகளையும் மதிக்க பழகிக் கொள்ளுங்கள். மனைவி குடும்பத்தோடு ஒட்டி பழகுவது சிரமமாக இருந்தாலும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் வேலைகளை இருவரும் பங்கி செய்வதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லக்கூடிய மனப்பக்குவம் கூடி உங்கள் உறவு மேம்படும்.

எப்போதும் எதற்கெடுத்தாலும் சண்டை இட்டு விவாதங்கள் செய்வதை நிறுத்தி விடுங்கள். இருவரும் பொய் பேசாமல் ஒளிவு மறைவின்றி உள்ளதை பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்கள் ஒற்றுமை அதிகரிக்கும்.

---- Advertisement ----