“உங்க வீட்டு தலையணை அழுக்கா இருக்கா..!” – எப்படி சுத்தப்படுத்தி பாருங்க..!

வீட்டில் இருக்கும் தலையணைகளை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் ஒரு நாளில் எட்டு மணி நேரம் இந்த தலையணையை வைத்துத்தான் நாம் உறங்குகிறோம். எனவே தலையணை சுகாதாரம் என்பது ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லை எனில் இந்த தலையணை மூலம் பல நோய்கள் உங்கள் சருமத்தை தாக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய இந்த தலையணையில் இறந்த சரும செல்கள் முதல் நமது வியர்வை வரை பல அசுத்தங்கள் பட்டு அழுக்காக இருக்கும். எனவே இந்த அழுக்கினை நீக்கக்கூடிய எளிய வழியை பற்றி எப்போது தெரிந்து கொள்ளலாம்.

தலையணையை சுத்தப்படுத்த கூடிய விதம்

பொதுவாக தலையணை அனைத்துமே இலவம் பஞ்சு அல்லது நார் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் எனவே அவற்றை சுத்தப்படுத்துவது மிகவும் எளிதான விஷயம் அல்ல.  பருத்திகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் தலையணை மற்றும்  செயற்கை நார்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தலையணைகளும் இதில் அடக்கமாகும்.

எனவே தலையணையை சுத்தம் செய்வதற்கு முன்பு தலையணையில் இருக்கக்கூடிய உறையை எடுத்து வாரத்துக்கு ஒரு முறை கட்டாயம் துவைத்து விட வேண்டும்.

மேலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் உங்கள் தலையணையை  துவைப்பது மிகவும் முக்கியம். இந்த தலையணையை நீங்கள் கோடை காலத்தில் சுத்தம் செய்யும் போது மிக விரைவில் உலர்ந்து கிடைக்கும்.

---- Advertisement ----

தலையணையை நீங்கள் டிடர்ஜனைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவி விட்டு பிறகு அதை வெய்யில் செங்குத்தாக வைத்து உலர்த்தாமல் பக்கவாட்டில் வைத்து உலர்த்துவது மிகவும் முக்கியம். ஏனென்றால் நீங்கள் செங்குத்தாக உலர்த்தும்போது அதில் இருக்கும் பஞ்சுகளும் கீழே அப்படியே வந்து விடும்.

துணிகளை விட தலையணை காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே கிடைமட்டமாக காய வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

நல்ல உச்சி வெயிலில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை உயர்த்தி வைக்கும் போது உங்கள் தலையணையில் இருக்கும் அழுக்குகள் நீங்கி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கு எந்த விதமான கேடுகளையும் ஏற்படுத்தாது.

---- Advertisement ----