யூ-ட்யூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசு முக்கிய முடிவு..! வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல youtubeரான இர்பான் கடந்த ஆண்டு மே 14ம் தேதி ஆலியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மனைவி ஆலியா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மனைவி ஆலியா வின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதித்துப் பார்க்க இர்ஃபான் தனது மனைவியை அழைத்துக்கொண்டு துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் கரு பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்.

யூ-ட்யூபர் இர்ஃபான்:

அவர் கருப்பரிசோதனை செய்தது மட்டுமே இல்லாமல். அதனை இந்தியாவிற்கு வந்ததும் தன்னுடைய youtube தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

அத்துடன் அதை ஒரு விழாவாகவே தன்னுடைய நண்பர்கள் மற்றும் YouTube பிரபலங்களை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் celebrate செய்து கொண்டாடியிருக்கிறார் .

---- Advertisement ----

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. காரணம் இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சட்டப்படி பரிசோதனை செய்யக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.

அதையும் மீறி செய்பவர்களுக்கு சட்டப்படி மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என இருக்கும் சமயத்தில், இர்பான் அதை ஒரு விழாவாக கொண்டாடி வீடியோ வெளியிட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

அவரின் இந்த செயலை பலர் எதிர்த்ததுடன் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா?

இதையடுத்து இந்த விவகாரம் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு செல்ல அங்கு சட்டவிரோதமாக இர்பான் செய்தது மிகப்பெரிய குற்றம் என்று எச்சரித்தனர்.

மேலும், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும், விரைவில் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .

இது குறித்து இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்.

நீக்கிய உடனே இதை வெளியிட்டதற்காக இர்பான் பகிரங்கமாக மன்னிப்பு ஒன்றையும் கேட்டு அதையும் வீடியோவாக தன்னுடைய YouTube பக்கத்திலே வெளியிட வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர் .

அவர்கள் கேட்டதின்படியே இர்பான் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு யூட்யூபில் வீடியோவையும் பதிவேற்றம் செய்திருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய இர்பான்:

இருந்தாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. இதனிடையே கடந்த மே 21 ஆம் தேதியன்று மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்துப் பார்த்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார்கள் .

பின்னர் நான் செய்தது மிகப்பெரிய தவறு. என்னை மன்னித்து விடுங்கள் என இர்பான் மன்னிப்பு கடிதம் ஒன்றை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்த கடிதத்தை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் கூறுகையில்,

இந்தியாவில் இந்த விவகாரம் நடக்கவில்லை. துபாயில் நடந்திருக்கிறது. இது முற்றிலும் புதிதாக இருப்பதால் என்ன செய்யலாம் என்று எல்லோரும் ஒன்று கூடி வழிகாட்டுதல் வழங்க கோரி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம் .

தமிழ அரசின் அதிரடி முடிவு:

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இதுபோன்ற கருவின் பாலினத்தை அறிய வேண்டும் என இந்தியாவில் இருந்து யாரேனும் சோதனை செய்ய வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது.

மேலும், மற்ற நாடுகளுக்கும் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்று நம் நாட்டின் சார்பில் அறிவுறுத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம் என இளங்கோ மகேஸ்வரன் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து பிரச்சனை இழுத்துக் கொண்டே இருப்பதால் இர்பான் மிகப்பெரிய மன உளைச்சலில் இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

---- Advertisement ----