Connect with us

இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2023 வியாழக்கிழமை. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்களும்  அவன் நினைத்தபடி நடப்பதற்கு கடவுளின் அருள் இருப்பதோடு அவர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் வகையில் கோள்களில் சஞ்சாரம் இருக்க வேண்டும். அவ்வாறு கோள்களின் சம்சாரம் இல்லையெனில் அதற்கு தக்க பரிகாரங்களை செய்து மேற்கொள்வதின் மூலம் நினைக்கின்ற காரியத்தை முடிக்கின்ற ஆற்றல் கிடைக்கும்.

எனவே ஒவ்வொரு மனிதர்களும் அவர்களின் கோள்களின் ஆதிக்கத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே இன்று ஆற்றல் குறையும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வுகள் தோன்றி மறையும். நீங்கள் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச்சுமை கடினமாக இருப்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும். ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக பணிகளை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நாள்.

நிதி நிலைமையை பொருத்தவரை பண வளர்ச்சி இன்று குறைந்த அளவே இருப்பதால் பணத்தை நீங்கள் திறமையுடன் கையாளுவது அவசியம். அதன் மூலம் அனாவுசிய செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவளை அளிப்பதோடு ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனத்தை செலுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் எதையும் நீங்கள் செயல்படுத்தி விடலாம். மனநிலையில் நல்ல ஆரோக்கியம் இருக்க வேண்டும். உற்சாகமான மனநிலையை கொண்டு இருந்தால் நீங்கள் நல்ல முடிவுகளை இன்று எடுக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உறுதியோடு இருக்கும் நீங்கள் பணியில் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்வீர்கள். மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உங்களது தொழில் திறன் மிளிரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை போதுமான அளவு பணப்புழக்கம் உங்களிடம் காணப்படும். பணத்தை உங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்திவீர்கள். முடிந்தவரை இன்று சேமிக்க முயற்சி செய்வதின் மூலம் சேமிப்பு உயரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியம் நன்றாக இருப்பதாக நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள்.

மிதுனம்

எல்லாவற்றிலும் வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய மிதுன ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு குறைவாக இருப்பதால் எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். நீங்கள் மற்றவர்களோடு பேசும் போது கவனத்தோடு பேசுவது அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் உங்கள் கடின உழைப்புக்கான நல்ல பெயரை பெற்று விடலாம் என்று எண்ணம் இருந்தாலும் அந்த எண்ணம் ஈடேறாது.

நிதி நிலைமையை பொருத்தவரை குடும்ப பொறுப்புக்கள் அதிகரிப்பதின் காரணமாக பல செலவு அதிக அளவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தந்தையின் உடல்நலையில் நலனை செலுத்த வேண்டும்.

 அதன் நிமித்தமாக செலவுகள் வந்து சேரும் இது உங்களுக்கு கவலையை உண்டாக்கி கொடுக்கும்.எனவே இன்று கவனத்தோடு இருக்க வேண்டிய நாள்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு அவ்வளவு அனுகூலமான நாளாக இல்லை. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க இயலாத சூழ்நிலை உள்ளதால் அதை தள்ளிப் போடவும். பொறுமை கட்டாயம் என்று தேவை. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணி இடச் சூழ்நிலை உங்களுக்கு சுமுகமாக இல்லை. சக பணியாளர்களின் தொடர்பால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனத்தோடு இருக்கவும். பணத்தை  பொருத்தவரை பற்றாக்குறை நிலவ கூடிய நாள். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்கலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். தோளில் அரிப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கலைப்பு காரணமாகவும் போதிய தூக்கமின்மை காரணமாகவும் உங்களுக்கு இன்று ஆரோக்கிய பாதிப்புகள் அதிகளவு காணப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சிறந்த நாளாக இருப்பதால் நீங்கள் விரைந்து எதையும் செயலாற்றுவீர்கள். திருப்தியான மனநிலை இருக்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வளர்ச்சிக்கு உகந்த நாளாக இந்த நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக பணியாற்றுவீர்கள். பணியின்  காரணமாக நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் பணிகள் அனைத்தையும் திறம்பட முடிக்கும் யோகம் உள்ளது.

 பண வரவு அதிகமாக இருக்கும் நாள் என்பதால் நிதி நிலையில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பீர்கள். பணத்தை நகை மற்றும் ஆடம்பரப் பொருள் வாங்க பயன்படுத்துவதற்கு நீங்கள் விருப்பத்தோடு இருப்பீர்கள். அந்த வகையில் நீங்கள் இன்று பொருட்களை வாங்குவதால் பயன்கள் ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லை மிக தைரியத்தோடு நல்ல ஆரோக்கியத்தோடும் நீங்கள் இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று உங்களுக்கு முன்னேற்றம் மிக எளிதில் கிடைக்கும். சின்ன முயற்சியை போட்டாலும் தெரிய வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் திறமையை வெளி உலகத்திற்கு காட்டுவீர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு நீங்கள் செயல்பட்டு வெற்றி மேல் வெற்றியை குவிக்க கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மிக அதிக அளவு உற்சாகத்தோடு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பணிகளை செய்வீர்கள். புதிய பணி வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பற்றாக்குறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பயனுள்ள வகையில் உங்கள் செலவுகள் இருக்கும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனதில் தைரியம் மற்றும் திருப்தி காரணமாக உடல்நிலை ஆரோக்கியத்தோடு இருக்கும். எந்தவிதமான சுணக்கமும் அது இல்லை எனவே ஆரோக்கியத்தில் கவலை வேண்டாம்.

துலாம்

 துலாம் ராசி நேயர்களே இன்று வளர்ச்சிகரமான நாளாக இருப்பதால் உங்கள் சின்ன முயற்சி கூட பெரிய அளவில் வெற்றி தரும். இன்று மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதால் எல்லா காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதை பார்த்து உங்கள் சக பணியாளர்கள் ஆச்சரியம் அடைவார்கள். குறித்த நேரத்தில் பணிகள் அனைத்தும் முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சாதகமாக இருப்பதால் உங்கள் பணப்புழக்கம் அதிகரித்து சேமிப்புகள் உயரும். ஆரோக்கியமும் சீராக இருப்பதால் எந்த கவலையும் தேவையில்லை. ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை நீங்கள் தேக ஆரோக்கியத்துடன் சிறப்போடு இருக்கக்கூடிய நாள்.

விருச்சிகம்

 விருச்சிக ராசி அன்பர்களே இன்று அசௌரியங்கள் அதிகளவு காணப்படும். மன அழுத்தம் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நல்ல இசைகளை கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக அளவு ஈடுபதின் ஈடுபடுவதின் மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும்.

 தொழிற்சாலத்தை பொருத்தவரை பணிகளை செய்து அவற்றை முடிப்பது கடினமாக இருக்கும். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் எதையும் திட்டமிட மறக்காதீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணத்தை கையாளுவது கடுமையாக இருக்கும். பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது. ஆரோக்கியத்தில் சற்று குறை உள்ளது.

இதன் காரணமாக உங்களிடம் பதட்டம் அதிகரிக்கும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். ஆரோக்கியம் சிறப்புடன் இருக்க வேண்டுமென்றால் அதீத கவனத்தை செலுத்துவது அவசியம்.

தனுசு

 எப்படியும் வெற்றி விட வெற்றி பெற்று விட வேண்டும் என்ற போராடும் குணத்தை கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு மந்தமான நாளாக இருப்பதால் சுறுசுறுப்புடன் நீங்கள் இருக்க வேண்டும். நல்லதை நினைவுகள் நல்லதை செய்யுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை நீங்கள் திறமையாக பணியாற்றினால் சில ஏமாற்றங்கள், தடைகள் வந்து செய்யக்கூடிய நாள் என்பதால் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணியாளர்களுடன் நல்ல முறையில் நீங்கள் தொடர்பில் இருந்தாலும் நட் பலன்கள் கிடைக்காது.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று செலவுகளை தவிர்க்க முடியாத நாள் என்பதால் செலவுகளை கட்டுப்படுத்தக்கூடிய வழிகள் இருந்தால் அவற்றை கடைபிடிக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளில்லை. முதுகுப் பகுதியில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மூச்சு சம்பந்தமான பிரச்சனை இருமல் போன்றவை ஏற்படலாம்.

மகரம்

 மகர ராசி நேயர்களின் மனதை மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வகையில் இன்று வெற்றிகரமான நாளாக இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். நம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி மேல் வெற்றியை குவியுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். திறமைகள் பாராட்டுக்கள் மூலம் உங்கள் மனம் மகிழ்ச்சியை அடையு.ம் உங்கள் செயல் திறன் மூலம் நீங்கள் கூடுதல் நன்மைகளை பெறக்கூடிய நாள்.

நிதியை பொறுத்தவரை பணவரவு அதிகரித்து காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் நீங்கள் செலவு செய்வீர்கள். ஆரோக்கியமும் மிகச் சிறப்புடன் காணப்படுவதால் இன்று உங்களிடம் அதிகப்படியான ஆற்றல் மிகுந்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய நாளாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கும்பம்

 கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று துடிப்பான நாளாக இருப்பதால் உங்கள் லட்சியங்களை அடைவதற்காக நீங்கள் முயற்சி செய்வீர்கள். நீங்கள் உங்களுக்கென சில செயல்களை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது.

 உங்கள் சக பணியாளர்களுடன் நல் உறவை பராமரிப்பீர்கள். கடினமான பணிகளை கூட மிக எளிதில் முடிக்க கூடிய சூழ்நிலை இன்று தொழிற் ஸ்தானத்தில் உள்ளதால் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணம் மிகுதியாக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்தீர்கள். குறிப்பாக நல்ல காரியங்களுக்கு வாரி வழங்குவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சில சௌவுரியங்கள் இருப்பதால் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டியதில்லை.

மீனம்

 மீன ராசி நேயர்கள் எதிர்பார்த்த அளவு இன்று பலன்கள் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த அளவு பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திப்பீர்கள் எல்லாவற்றையும் நட்பு முறையில் அணுகுவது உங்களுக்கு மேலும் பல நன்மைகளை கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகமான அளவு பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் உங்களுக்கு கவலை உண்டாகும். பணியாற்றும் முறையை திட்டமிட்டு அதற்கு ஏற்றது போல் செயல்படுத்துவதின் மூலம் நன்மைகள் கிட்டும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பயணங்கள் மேற்கொள்ளும் போது பல இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனத்தோடு பணத்தை கையாளுவது அவசியம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக பண செலவு செய்ய நேரிடும். குழந்தைகளின் தோள்கள் மற்றும் கணுக்கால்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களை கவனிப்பதில் கவனத்தை செலுத்தவும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top