Connect with us

இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2023  திங்கட்கிழமை. ஒருவரின் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தால் அவர்கள் மிகவும் சிறப்பான நிலையை அடைவார்கள். அந்த யோகங்களை  பொருத்தவரை மகாராஜா யோகம், சக்கரவர்த்தி யோகம் என பல யோகங்கள் குறிக்க குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோலவே ஒருவர் வாழ்க்கையில் செல்வம், பதவி, புகழ் பெறுவதற்கு கிரக அமைப்புகள் சீராக இருக்க வேண்டும்.

 அப்போதுதான் மேற்கூறிய அத்தனை யோகங்களும் அவர்களுக்கு வந்து சேரும். அது மட்டுமில்லாமல் கிரகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்க்கையாலும் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணைவதாலும் இந்த கிரகங்களின் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கொண்டு யோகமானது அமைகிறது.

 அப்படிப்பட்ட ஜாதகத்தில் அவரது பிறந்த நேரம் மற்றும் கணித்த ஜாதகத்தைக் கொண்டே அவர்களது பலன்களை மிக எளிதில் நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

mesham rasi palan today | mesham rasi palan today in tamil

மேஷ ராசி அன்பர்களே இன்று வெற்றிகரமாக நாள் என்பதால் இன்றைய நாளை நன்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்வதில் மூலம் வெற்றிகளை வாரிக்குவிக்கலாம். உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் அதிகளவு காணப்படும்.

 தொழிற்ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள். உங்களின் நேர்மையான அணுகுமுறைக்கு நல்ல பெயர் கிடைக்கும். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். கையில் இருக்கும் பணம் உங்களுக்கு போதுமான மகிழ்ச்சியை அளிக்கும். எனினும் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும் இந்த நாள் ஆற்றலோடு நீங்கள் இருப்பதால் ஆரோக்கியத்தை எந்த கவலையும் வேண்டாம்.

ரிஷபம்

risabam rasi palan today | risabam rasi palan today in tamil

 ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் பணிகளை சுமுகமாக மேற்கொள்வீர்கள். முக்கியமான நடவடிக்கைகளையும் மற்றும் உங்களது ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தக்கூடிய நாளாக இருப்பதால் இந்த நாள் உங்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் விதத்தில் இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவர் உங்கள் பணிகள் தரமாகவும் பாராட்டை பெறும். உங்கள் பணிகளை உறுதியுடன் செய்து மிகச் சிறிய முறையில் பணியாற்றுதீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை முன்னேற்றகரமான நாளாக உள்ளது. பணத்தில் சேமிக்கும் நிலை காணப்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவதால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடிக்கின்ற ஆற்றலும் எழுச்சியும் உங்களுடைய இருக்கும் எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

மிதுனம்

midhunam rasi palan today | midhunam rasi palan today in tamil

மிதுன ராசி அன்பர்களே என்று நீங்கள் ஆன்மீகத்துக்காக உங்கள் நேரத்தை ஒதுக்குவதின் மூலம் உங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை மிக எளிதாக சமாளிக்கலாம். இன்று சற்று நாள் சுமாராக இருப்பதால் நீங்கள் ஆன்மீகத்தில் உங்கள் புத்தியை செலுத்துவது மிகவும் நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை ஆற்றுவதில் தாமதம் உள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் மிக எளிதில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை இன்று உங்களுக்கு சிறப்பான நாள் இல்லை. கூடுதல் செலவுகள் அதிகளவு ஏற்படு.ம் அதிர்ஷ்டம் என்று உங்களுக்கு சாதகமாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தந்தையின் உடல் நலத்தை அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய கூடிய நேரம். தந்தையை முறையாக கவனித்துக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள் அதுவே போதுமானது.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை - Today Rasi Palan in Tamil

கடகம்

kadagam rasi palan today | kadagam rasi palan today in tamil

கடக ராசி அன்பர்களே இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் உங்கள் தன்னம்பிக்கையை அவசியம் வளர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இன்று உங்களுக்கு இந்த நாள் மிகவும் கடினமான நாளாக இருக்கும். அவ்வளவு முன்னேற்றம் இல்லை. கூடுதல் பணிகளை சந்திக்க கூடிய நேரம் பணிகளில் கவனத்தை சிதறுத்துவதின் மூலம் நீங்கள் நன்மை அடைய முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இல்லை. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எனவே நிதியைப் பற்றி சற்று கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன உளைச்சல் காரணமாக கை கால்களை வலி ஏற்படும். இப்பொழுது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.

சிம்மம்

simmam rasi palan today | simmam rasi palan today in tamil

சிம்ம ராசி நேயர்களே இன்று வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தைரியமான போக்கின் காரணமாக சிறப்பான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். எனவே நீங்கள் பயணம் மேற்கொள்ள தயங்க வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கையில் உள்ள பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் முதலீடு மற்றும் சேமிப்பில் நீங்கள் உங்கள் மனதை செலுத்துவீர்கள்.இன்று கட்டாயம் சேமிக்க முடியும்.

 ஆரோக்கியம் பற்றி கவலை கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லை.அது சிறப்பாக உள்ளது. உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் நீங்கள் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான இல்லை.

கன்னி

kanni rasi palan today | kanni rasi palan today in tamil

கன்னி ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நீங்கள் அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எனவே இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய எதுவும் நடக்காது.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியாளர்களிடம் மோதல்கள் ஏற்படும். பணிகளை பொறுமையாக கையாள வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இல்லை. வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக இல்லை சோர்ந்து போவீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

துலாம்

thulam rasi palan today | thulam rasi palan today in tamil

துலாம் ராசி அன்பர்களே இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நீங்கள் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய நீங்கள் இறைவழிபாட்டில் உங்கள் புத்தியை செலுத்த வேண்டும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று சிறந்த பலன் பெற கவனமாக பணியாற்றுங்கள். தொழில் சார்ந்த அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று முன்னேற்றகரமான நாள் இல்லை. பணத்தை பொருத்தவரை முக்கிய முடிவுகளை எடுக்க நீங்கள் இன்று தயங்க வேண்டும்.

முக்கிய முடிவுகளை இன்று எடுக்கவே வேண்டாம். நிதியில் பணத்தை சேர்க்க திட்டங்களை தீட்டுவது அவசியம் பொறுத்த வரை கவனமாக இருங்கள்.

செரிமான பிரச்சனைகள் கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

விருச்சிகம்

viruchigam rasi palan today | viruchigam rasi palan today in tamil

விருச்சிக ராசி அன்பர்களே இன்று எதார்த்தமான அணுகுமுறை மற்றும் தொழிற்சார்ந்த முறையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் வளர்ச்சிக்கு இன்று நீங்கள் திட்டம் தீட்டுவது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அமைதியாக இருப்பதன் மூலம் எல்லாவற்றையும் சாதித்து விடலாம்.

 உங்களுக்கு பலன் அதிகரிக்க வேண்டும் என்றால் தியானத்தின் புத்தியை செலுத்தவும். தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணியில் மும்மரமாக இருப்பீர்கள்.

 பணியிடத்தில் மாறுதலுக்கு ஏற்ப பணி செய்ய நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று ஸ்திறமான சூழ்நிலை நிலவுவதால் வரவும். செலவும் சமமாக இருக்கும் நிதி சம்பந்தமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2023 புதன்கிழமை - Today Rasi Palan in Tamil

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தனுசு

Dhanusu rasi palan today | Dhanusu rasi palan today in tamil

தனுசு ராசி அன்பர்களே இன்று தொடர் முயற்சியின் மூலம் எண்ணற்ற வெற்றிகளை பெற முடியும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு மிக நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி நிவர்த்தமாக பயணங்கள் மேற்கொள்ளலாம். உங்களுக்கு அதன் மூலம் நல்ல பதட்டம் இருக்கும்.

 தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உருவாகி வரும். எனவே அவற்றை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவிற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் நிதியை பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆன்மிக காரியங்களுக்காக பணத்தை செலவழித்ததின் மூலம் நன்மை ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தேகநலன் சிறப்பாக உள்ளது. நேர்மறை எண்ணம் இருப்பதின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

magaram rasi palan today | magaram rasi palan today in tamil

மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கக்கூடிய நாளாக இருப்பதால் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். இன்றைய தினம் அதிக நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். உறுதியுடன் இருக்கும் உங்களுக்கு சுய முயற்சியின் காரணமாக எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தொழிலில் அபாரமான திறமை என்று வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. சில முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.நல்ல வளர்ச்சி நிதியில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக உள்ளதால் நீங்கள் நல்ல முறையில் இன்று இருப்பீர்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கும்பம்

kumbam rasi palan today | kumbam rasi palan today in tamil

கும்ப ராசி அன்பர்களே இன்று உற்சாகமாக உங்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவித்து விடுதல் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாள் நல்ல நாளாக இருக்க நீங்கள் நேர்மறையான எண்ணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பணிகள் அதிகமாக இருப்பதால் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பணிகளை திறம்பட முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கவன ஈன்மை காரணமாக பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.எனவே தேவையற்ற செலவால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும். எனவே நிதி நிலைமையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தியானம் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் உங்களது பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.  குறிப்பாக இருமல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் இருமல் ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவத்தை உடனே செய்து விடவும்

மீனம்

meenam rasi palan today | meenam rasi palan today in tamil

மீன ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்களில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். எதிர்மறையான உணர்வுகள் உங்களுக்கு குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே அது போன்ற எதிர்மறை எண்ணத்தை நீங்கள் தவிர்த்து விடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி புரியும் சூழல் இன்று சிறப்பாக இல்லை. பணியில் ஏற்படும் தவறுகளால் உங்களுக்கு கவலை ஏற்படும்  எனவே எச்சரிக்கையோடு இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பாக இல்லை. பணத்தை சிறப்பாக கையாள முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே வரவுக்கு ஏற்ப தடவினை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று ஆரோக்கியத்தில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. சளி மற்றும் தொண்டை பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top